'மருத்துவரின் பரிந்துரையோடு செய்யப்படும் கருக்கலைப்பு, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்காது' - ஆய்வு! | Abortions aren’t bad for your health, but being denied one is

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:07:00 (14/06/2019)

'மருத்துவரின் பரிந்துரையோடு செய்யப்படும் கருக்கலைப்பு, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்காது' - ஆய்வு!

'மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில், கட்டாயம் கருக்கலைப்பை மேற்கொள்ள வேண்டும்' - ஆய்வு

ருக்கலைப்பு தொடர்பான பல்வேறு தவறான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவிவருகின்றன. அதில் முக்கியமான ஒன்று, கருக்கலைப்பு செய்து கொண்டால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நலம் தீவிரமான பாதிப்புக்குள்ளாகும் என்பது. ஆனால், இது வெறும் நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

கருக்கலைப்பு

அனல்ஸ் ஆஃப் இன்டெர்னல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற மருத்துவப் பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த  30 கருக்கலைப்பு மையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 2008 - 10-ம் ஆண்டுக்கு இடையில், அங்கு சிகிச்சை மேற்கொண்டிருந்த பெண்களை முன்வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் கருவை கலைத்துக் கொண்டவர்கள் (First-trimester abortions),  நான்கு - ஆறு மாதங்களுக்குள் கருவை கலைத்துக்கொண்டவர்கள் (Second-trimester abortions),  மருத்துவர் அறிவுறுத்தியும் கருவைக் கலைக்காமல் குழந்தை பெற்றுக்கொண்ட வர்கள் என  900 பெண்களின் உடல்நிலை ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

அந்தப் பெண்கள் அனைவரும், வருடம் இருமுறை என்ற விகிதத்தில்  ஐந்து ஆண்டுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், மோசமான மற்றும் அதிக உடல் உபாதைகளை எதிர்கொண்டவர்கள், மருத்துவரின் பரிந்துரையை மீறி குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள்தானே தவிர, கருவை கலைத்துக்கொண்டவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளது. 

பெண்கள் நலம்

 

மருத்துவரின் அறிவுரையையும் மீறி குழந்தை பெற்றவர்களில், 27 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அடிக்கடி தலை வலிப்பது, ஒற்றைத் தலைவலி பிரச்னை, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பகாலத்திலேயே சிக்கல் அதிகரித்ததால், இரு பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, கருவை கலைத்துக்கொண்டவர்களில், முதல் பருவத்தில்  20 சதவிகிதம் பேரும் - இரண்டாவது பருவத்தில் 21 சதவிகிதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில், கருக்கலைப்பை மேற்கொள்வது அவசியம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க