`பாதுகாப்பை உறுதிசெய்ய வலிமையான சட்டம்!' - தேசிய அளவில் தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம் | Indian medical association declared national level strike on monday

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (14/06/2019)

கடைசி தொடர்பு:16:41 (14/06/2019)

`பாதுகாப்பை உறுதிசெய்ய வலிமையான சட்டம்!' - தேசிய அளவில் தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் (Indian Medical Association) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள்

கடந்த திங்கட்கிழமை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் கவனக்குறைவே அவரது இறப்புக்குக் காரணம் எனக் கூறி, நோயாளியின் உறவினர்கள் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, பரிபஹா முகர்ஜி என்ற பயிற்சி மருத்துவருக்கு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலக மருத்துவக் கூட்டமைப்பும் சுகாதார மையங்களில் வன்முறையைத் தடுக்க வலிமையான சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது. 

ஸ்ட்ரைக்

மருத்துவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளது. ஜெயலால்மருத்துவமனைகளின் முன்பாக கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஜெயலால் நம்மிடம் பேசியபோது,

``நாடு தழுவிய அளவில் இன்று தர்ணா, பேரணி நடத்தி வருகிறோம். வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் முழு வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் இன்றே வேலை நிறுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள். மருத்துவர்களைப் பாதுகாக்க வலிமையான சட்டங்களை இயற்ற வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்  '' என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க