'கல்'லையும் கரைக்கலாம்!

சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி சிறுநீரகத்தில் கல் உருவாதல் பிரச்னை நிலவுகிறது. கல் பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் பல பிரச்னைகளுக்கு அது காரணியாகிவிடும் என எச்சரிக்கிறார் ஓமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்.

“சிறுநீரகத்தில் உருவாகும் கல், 50 சதவிகிதம் பேருக்கு தானாகவே வெளியேறிவிடும். மீதம் உள்ளவர்களுக்குத் தான் சிகிச்சை தேவை. கல்லை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அடுத்தடுத்து கல் சேர்ந்துவிடும். 

தொற்று நோய் கிருமிகள் மூலமாகவும், சிறுநீரில் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், உணவில் சுண்ணாம்புச்சத்து மிகுந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் கல் உருவாகிவிடுகிறது. இதைத் தவிர, செரிமானப் பிரச்னை, குடல் புண், மது அருந்துதல் போன்ற காரணங்களாலும் கல் உருவாகலாம்.

நிறையக் கல் உருவாவதாலும், ஒரு கல்லே பெரிதாகிவிடுவதாலும் சிறுநீரகப் பாதையில் சிக்கி, பெரும் அவஸ்தையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் உட்காரவும், சாயவோ, நிற்கவோ, நிம்மதியாக உறங்கவும் முடியாமல் அவதிக்குள்ளாக நேரிடும். மேலும், வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தக்கசிவு என அறிகுறிக‌ள் தென்படும்.

கல் எந்த இடத்தில் இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது, எப்படி உருவானது என்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். கல், 9 மில்லி மீட்டர்அளவுக்கு இருந்தாலும்கூட, மாத்திரையின் மூலமே வெளியேற்றிவிடலாம்.

மாத்திரைகளைக் கொடுக்கும் கரையவில்லை, கல் பெரிதாக இருக்கிறது என்கிறபோது அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.

சிறுநீரகக் கல் பிரச்னையை தவிர்ப்பது எப்படி....

* வாழைத்தண்டை சாறாகச் செய்து அருந்தலாம்.

* அதிகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- ரேவதி
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!