இதயத்துக்கு சூப்பர் டானிக், பிளம்ஸ்!

லைப்பகுதிகளில் அதிகமாக விளையும் பழங்களில் ஒன்று பிளம்ஸ். சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்தப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும். பொதுவாக சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியவை.

அந்த வகையில் ஆப்பிள், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி  போன்ற சிவப்பு நிறப் பழங்கள் வரிசையில் இடம் பெறும் இந்த பிளம்ஸ் பழத்தின் பலன்கள் பலபல!

* எளிதில் ஜீரணமாகக்கூடிய பிளம்ஸில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள சாப்பிட்டால், இசாதின் போன்ற நார்ப்பொருட்கள் ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைத்து மலச்சிக்கல் குறைபாட்டை சரி செய்யும்.

* வைட்டமின்-சி அடங்கியுள்ள பிளம்ஸ், மிகச் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளும் கூட. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், வைட்டமின் சி-ன் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் வைட்டமின் சி-க்கு உண்டு.

* வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது. சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித்தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது.

* பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ள பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின்-கே உள்ளது. இது ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடியது. மேலும், ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்குவதோடு, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கக்கூடியது.

* கண்பார்வையை தெளிவுறச் செய்யும் சக்தி பிளம்ஸுக்கு உண்டு. இதயத்திற்கு சிறந்த டானிக், சிவப்பு நிற பிளம்ஸ் பழங்கள். இளவயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால், உடல் புத்துணர்வு பெறும்.
 
- எம்.மரிய பெல்சின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!