என் உச்சி மண்டையில் சுர்.... | precautionary steps for heat stroke

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (03/06/2015)

கடைசி தொடர்பு:17:21 (03/06/2015)

என் உச்சி மண்டையில் சுர்....

கிக்கும் வெயிலின் தாக்கத்தினால், எரிச்சல் உணர்வும், பதற் றமும், டென்ஷனும் ஆட்கொண்டு, நம் உடல் நலத்தையும், மனவளத்தையும் சாய்க்கப் பார்க்கின்றன. உச்சி வெயிலில் நடப்பதே பெரிய கொடுமை என்று நாம் நினைக்கையில் உச்சிவெயிலில் வேலை செய்வோர்களின் நிலைதான் மிகவும் பரிதாபம்.

தாகம், மயக்கம், சோர்வு, கண் எரிச்சல் என ஆரம்பித்து இந்த ஆண்டு வெயிலின் தாக்கத்தினால் உயிரை இழந்தவர்களின் எண்ணிக்கையும் நம்மை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டன.

வெயிலின் தாக்கத்தால், தமிழகத்தில் சிலர் ஹீட் ஸ்ட்ரோக் (சன் ஸ்ட்ரோக்) வந்து இறந்தார்கள் என்றால், ஆந்திர மாநிலத்தில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டிவிட்டது அதிர்ச்சியின் உச்சம்.

வெயிலின் தாக்கத்தால் வரும் ஹீட் ஸ்ட்ரோக் பற்றியும், அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதையும் விவரிக்கிறார் நரம்பியல் மருத்துவர் திலோத்தம்மாள்.
 
சராசரியாக நமது உடலின் வெப்பநிலை 98.6 என்றால், ஹீட் ஸ்ட்ரோக் வரும் தருவாயில் 105 அளவுக்கு உடலின் வெப்பநிலை உயர்ந்துவிடும். இதனால், செல்களுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனும், குளுகோஸும் நின்று விடுவதால் செல்கள் செயலிழந்து இறப்பு நேரிடுகின்றன. உடலின் வெப்பத்தை தணிக்கக்கூடிய ஹைபோதலமஸ் (hypothalamus), உடலை குளிர்ச்சியாக்கும் செயல்முறையை செய்கிறது. ஹார்மோன், உடல் உறுப்புகள் சரியாக செயல்படவும் ஹைபோதலமஸ் உதவுகிறது.

உடல் சூடாகும்போது, ஹைபோதலமஸ், உடனே வேலை செய்ய தொடங்கும். உடலை குளிர்ச்சியாக்கும். சருமத்துக்கு ரத்தஒட்டம் பாயும். வியர்வை அதிகமாக சுரந்து ஆவியாகும். இந்த செயல்பாட்டுக்காக தேவைப்படும் வெப்பநிலையை உடலில் இருந்து எடுத்துக் கொண்டால் நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. இந்த செயல்பாடுகள் நடக்காவிட்டால் ஹீட் ஸ்ட்ரோக் வரும்.
 
யாருக்கு வரலாம்?

வியர்வை சுரக்காமலோ, சுரந்து ஆவியாகாமல் இருந்தாலோ, ஹைபோதல மஸ் சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப் புகள் அதிகம். வயதானவர்களுக்கு, ஹைபோதலமஸ் சரியாக வேலை செய் யாமல் போகலாம். குழந்தைகள் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், உடல் பலவீனமாகி ஹீட் ஸ்ட்ரோக் வரலாம். மிலிட்டரி, காவல் துறையினர், கட்டட தொழிலாளர்கள் வெயிலில் வேலை பார்க்கும்போது அவர்களின் உடலில் வெப்பம் கூடி ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.
 
வெப்பத்தின்போது, நம் உடலை பாதிக்கும் மது, காஃபி, கஃபைன் கலந்த உணவுகள், கொகைன், மருந்துகளை சாப்பிடுபவர்கள், இருமலுக்கு குடிக்கும் சிரப் மருந்துகள், சிகரெட், புகையிலை சுவைத்தல், காற்று இல்லாத இடத் தில் இருப்பது ஆகியவற்றால் உடல் அதிக வெப்பமடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தும். 

காரின் கதவுகளை அடைத்து உட்கார்ந்திருப்பதாலும், கார் பார்கிங் போன்ற காற்று புகாத இடங்களில் பத்து நிமிடங்களுக்கு மேல் இருந்தால், 20 ஃபேரன்ஹீட் வெப்பம் அதிகமாக உடலில் கூடும். இதனாலும் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.
 
அறிகுறிகள்

மயக்கம், வாந்தி, வயிறு பிரட்டல், படபடப்பு, கை, கால் மற்றும் தசைகள் பிடித்தல், தலைவலி, குழப்பமான மனநிலை போன்றவை ஆரம்ப அறிகுறிகள். தாங்கமுடியாத தலைவலி வந்து மயக்கம் அடையலாம். சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு போய்விடலாம். இதனால் இறப்பும் ஏற்படலாம்.
 
மயங்கி விழுபவர்களின் உடலைத் தொட்டு பார்த்தால் நெருப்பில் கை வைத்தது போல உணர்வு தெரியும். சிவப்பாக இருப்பவர்கள் எனில், அவர்களின் உடல் மேலும் சிவந்து போயிருப்பதை பார்க்கலாம். இவர்க ளுக்கு வியர்வை வராமல், அனைத்து செயல்பாடுகளும் நின்றுபோயிருக்கும்.
 
முதலுதவி எப்படி செய்வது?


மயக்கமடைந்துவிட்டால், உடனடியாக நிழலான இடத்துக்கு கொண்டு செல்லவேண்டும். உடைகளை களைந்து காற்று போகும்படி செய்யலாம். குழாயை திறந்துவிட்டு தண்ணீர் படும்படி உட்கார வைக்கலாம். உடல் முழுதும் நனையும்படி நீரை ஊற்றலாம். வாயில் தண்ணீரை ஊற்றுவது பயன் தராது.

சுயநினைவுடன் இருந்தால், 3 முதல் 4 கிளாஸ் தண்ணீர், இளநீர், உப்பு சர்க்கரை கலந்த நீரைக் கொடுக்க லாம். நிழலில் உட்கார வைக்கலாம். கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகளை கொடுக்கக் கூடாது.
 
தடுக்கும் வழிகள்

உச்சி வெயிலின்போது, குழந்தைகள், வயதானவர்களை வெளியில் அனுப்பக் கூடாது. பருத்தி ஆடைகளை தவிர்த்து வேறு எந்த ஆடைகளையும் அணிவிக்கக் கூடாது. அடர் நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். காற்று புகக்கூடிய ஒட்டைகள் இருக்கும் ஒலைத் தொப்பியை அணிவது சிறப்பு. வெயிலில் வேலை செய் வோர், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நிறைய தண்ணீரை அருந்த வேண்டும். அடிக்கடி உடலை ஈரமாக்கிக் கொள்ளலாம். திரவ உணவுகளை அதிகமாக சாப்பிடலாம். மயக்கம் அடைந்து கீழே விழுபவர் களை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.

ஹீட் வேவ்

1966-ல் சிக்காக்கோவில் 'ஹீட் வேவ்' வந்தது. அப்போது, அந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பிழைத்து வந்தவர்கள் கூட தனது வாழ்நாளில் தனியாக தன் பணிகளை செய்ய முடியாமல் போகும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டதால் சரியாக எல்லோரையும் கவனிக்க முடியாமல் போக சிலர் இறந்துவிட்டனர்.

சிலர் உயிர் பிழைத்தும் பாதிப்புகளோடு தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். எனவே,  ஹீட் ஸ்ட்ரோக் கால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். தாமதப்படுத்தி சிகிச்சை அளித்தால் சிலருக்கு மறதி, பிரச்னை, கவனக் குறைவு, ஆர்வமின்மை, சுயமாக தங்கள் வேலை களை செய்ய முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
 
- ப்ரீத்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்