தாய்ப்பால் வங்கி இருக்க கவலை எதற்கு?

லகின் முதல் தாய்ப்பால் வங்கி, வட அமெரிக்காவில், போஸ்டன் மாநகரத்தில்  1910 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்தியாவில் முதல் தாய்ப்பால் வங்கி மும்பை தாராவியில் 1989 ஆம் ஆண்டு, அர்மேதா ஃபெர்னாண்டஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில்  சென்னை எழும்பூர் அரசினர் குழந்தை நல மருத்துவமனையில் கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்த ஆண்டு உலகத் தாய்ப்பாலூட்டும் தினத்தின்  குறிக்கோள் -   “தாய்ப்பால் ஊட்டுதலும் வேலையும் ஆகிய இரண்டையும் திறம்படச் செய்வோம்”. இதனையொட்டி தாய்ப்பால் வங்கிகள் திருச்சி, மதுரை, கோவை, சேலம், தேனி என 5 மாவட்ட மருத்துவமனைகளில் துவங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 352 பெரிய பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தாய்ப்பாலைத் திரவத்தங்கம் என்று அழைப்பர். இது மிகையான வார்த்தை இல்லை. தாய்ப்பால் குழந்தைகளுக்கு  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அற்புத உணவு. குழந்தைகளுக்கு இதை மருந்தாக கூட பயன்படுத்த இயலும். குழந்தைகளை நோய்த் தொற்றுகளிடம் இருந்து காக்கும். தாய்ப்பால் பெறும் குழந்தைகளிடம் நல்ல மூளை மற்றும் உடல் வளர்ச்சியை காண முடியும்.

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறை மாதத்தில் பிறக்கின்றனர். இவர்கள் போதிய தாய்ப்பால் இல்லாமல், ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி தரக்கூடிய நன்மைகள் பல.

அதனால் தாய்ப்பால் வங்கியைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம்.

- ஐ.மா. கிருத்திகா

படங்கள்: தே. அசோக் குமார்

(மாணவப்பத்திரிக்கையாளர்கள்)

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!