Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை அறிமுகம்!

21-ம் நூற்றாண்டில், புற்று நோய்க்கான அதீத நம்பிக்கை அளிக்கும் சிகிச்சை முறையான “நெக்ஸ்ட் ஜெனரேஷன் போட்டோ டைனமிக் தெரபி (NGPDT)”யின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் NGPDT குளோபல் எனும் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தெரபி குறித்து சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் விளக்கினர்.



முதலில் பேசிய NGPDT குளோபல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். ஸ்காட் வாட்டர்ஸ், “நெக்ஸ்ட் ஜெனரேஷன் போட்டோ டைனமிக் தெரபியானது, LED விளக்கு, படுக்கை மற்றும் லேசர் அமைப்பு மூலமாக செயல்படுத்தப்படும் ‘ஆறாம் தலைமுறை போட்டோ சென்சிடைசர் ஏஜெண்ட்’ ஆகியவற்றை பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான மற்றும் தனிச்சிறப்பு கொண்ட நவீன முறையாகும். பாதிக்கப்பட்டவரின் முழு உடலுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த ஏஜெண்டானது, நச்சற்ற தாவரங்களில் இருந்து பெறப்படும் குளோரபில் ஆகும்.” எனக்கூறினார்.
 
 “20 நாடுகளில் அளிக்கப்பட்டு வரும் இந்த NGPDT சிகிச்சை முறையின் மூலம், புரோஸ்டேட் கேன்சர், மார்பகப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மூளை கட்டி போன்ற பல வகையான புற்றுநோய்களை அதிக பொருட்செலவின்றி குணப்படுத்தலாம்” எனவும் ஸ்காட் வாட்டர்ஸ் கூறினார்.

அடுத்து பேசிய NGPDT ஆசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர். எடி லி பாங், “புற்று நோய் மீதான அச்சத்தை கடந்த கால நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் இலக்கு. போட்டோ டைனமிக் தெரபி மீது ஆராய்ச்சி புரிந்து அதை உருவாக்கிய எங்கள் நிறுவனத்தால், எண்ணற்ற மக்களின் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன” என்றார்.



NGPDT சிகிச்சை முறை குறித்து பேசிய, அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தலைவர் கிரண் குமார் தனமாலா, “புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளோரபில் மருந்தை குடித்தவுடன், புற்றுநோய் உயிரணுக்கள் அந்த மருந்தை அதிக அளவில் ஈர்த்துக்கொள்ளும். பின்னர், வெளிச்சம் படும்போது, குளோரபில், புற்றுநோய் உயிரணுக்களை அழித்துவிடும். தாவரங்களில் நடக்கும் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) முறையே மனித உடலிலும் நடக்கிறது. விரைவில், இந்தியாவிலும் இச்சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்படும். இதன் மூலமாக அதிக உயிர்களை காப்பாற்றலாம்” என்றார்.    

NGPDT குளோபல் நிறுவனத்தின் மருத்துவர் டொனால்ட் மர்ஃபி, அசிய-பசிபிக் பிராந்தியத்தின் கூட்டாளிகள் ஜான். சுதீர் புத்தோட்டா, ஹான் சோ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

-ஜெ.விக்னேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close