வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (15/04/2016)

கடைசி தொடர்பு:13:36 (15/04/2016)

உடலை ஃபிட்டாக்கும் 10 கேட்ஜெட்ஸ்!

உடல் உழைப்புக்கு  அதிக இடம் இல்லாத, இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்ய கருவிகள் வந்துவிட்டது. நம்முடைய இதயத்துடிப்பு முதல் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பது வரை  ஒவ்வொன்றாக கணக்கிட்டு ஃபிட்னெஸ்  தொடர்பான ஆலோசனைகளை வழங்க  கேட்ஜெட்ஸ் வந்துவிட்டது. இப்போது சந்தையில்  முன்னணியில் இருக்கின்ற சில ஃபிட்னெஸ் கேட்ஜெட்களைப் பார்ப்போம்.

பெட்டிட் ஸ்லீப் டிராக்கர் அண்ட் வெல்னெஸ் கோச் (Beddit Sleep Tracker and Wellness Coach )

உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ள  முக்கியமானது தூக்கம். நாம் சரியாக தூங்குகிறோமோ என்பதை கணக்கிட்டுச் சொல்ல ஒரு கருவி வந்துவிட்டால் எப்படி இருக்கும். இதோ வந்து விட்டது பெட்டிட் ஸ்லீப் டிராக்கர். இந்த கேட்ஜெட்டை  தூங்கும் போது  படுக்கைக்கு அடியில் வைத்துவிட்டு அதன் மேல் படுத்து தூங்கினாலே போதுமானது. இரவில் நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதை கணக்கிட்டு கொண்டே இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம், எப்படி தூங்கியிருக்கிறீர்கள் என்பதை அலசி ஆராய்ந்து  ஒரு மதிப்பெண்ணை  காலையில்  புளூடூத் வழியாக ஸ்மார்ட் போனிலிருக்கும் பெட்டிட் மொபைல் ஆப்ஸுக்கு அனுப்பி விடும்.இதுமட்டுமில்லாமல் தூங்கும்போது உங்களின் இதயத்துடிப்பு, குறட்டை விடுவது, உங்களின் அசைவுகளை  கண்காணித்துச் சொல்கிறது   இந்த பெட்டிட் ஸ்லீப் டிராக்கர் .தூக்கம் சம்பந்தமான ஆலோசனைகளையும் வழங்குகிறது. நீங்கள் தூங்கும்போது எந்த தொந்தரவையும் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரவில் நீங்கள் நன்றாக தூங்கியிருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ளும்போது அடுத்த நாளை உங்களால் சிறப்பாக உற்சாகமாக தொடங்க முடிகிறது.
அமேசானில் இதன் விலை ரூ. 5,280 ஆகும்.

போலார் ஆர் சி 3 ஜிபிஎஸ் வாட்ச்    (Polar RC3 GPS Watch)


மிகவும் அழகான மிருதுவான எடை கொண்ட போலார் ஆர் சி 3 ஜிபிஎஸ் வாட்ச், நீங்கள் ஓடும்போதும், சைக்கிளிங் செய்யும் போதும் எவ்வளவு வேகமாக செல்கிறீர்கள், எவ்வளவு நேரத்தில் எவ்வளவு தூரத்தை கடந்து இருக்கிறீர்கள் என்பதை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கணக்கிட்டுச்  சொல்கிறது. இந்தக் கணக்கீட்டின் மூலம் என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனையும்  வழங்குகிறது. விளையாட்டு வீரர்கள் தங்களின் செயல் திறனை மேம்படுத்திக்கொள்ள  மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் இந்த கேட்ஜெட்டின் விலை ரூ.11,154.

நைக் ஃப்யூயல் பேண்ட்  (Nike Fuel  Band)

இந்த வாழ்க்கையே ஒரு விளையாட்டைப் போன்றதுதான். பழையதை எல்லாம் மறந்து விடுங்கள். நீங்கள் நடக்கும்போதும், ஓடும்போதும், நடனமாடும் போதும் , விளையாடும் போதும்  உங்களின்  ஒவ்வொரு  செயல்பாடுகளையும்  தடகளப் பயிற்சியாளரைப் போல அளவிட்டு சொல்கிறது நைக் ஃப்யூயல் பேண்ட். இதனுடன்  ஃபிட்னெஸ் மற்றும் உடல் எடை குறைவதை கண்காணிக்கவும் , நம் உடலில் குறையும் கலோரியை கணக்கிடவும், தினசரி நாம் செலவிடுகின்ற சக்தியை அளவிட்டும் சொல்கிறது. இந்த கேட்ஜெட்டை  கையில் ஒரு வாட்ச்சைப் போல  அணிந்து கொள்ளலாம். தடகள வீரர்களுக்கு முக்கியமாக இந்த கேட்ஜெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கேட்ஜெட்டை புளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ள முடியும். இதன் விலை ரூ.11,177 - ரூ.15,642

பாடி மீடியாஸ் அதெசிவ் பேட்ச் (BodyMedia’s Adhesive Patch)

இந்த கேட்ஜெட்டை  உடலில்  எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பொருத்திக்கொள்ளலாம். உங்களுடைய தினசரி செயல்பாடுகள், உங்களின் உடலில் எரிகின்ற கலோரியின் அளவு, தூக்கத்தின் அளவை கணக்கிடுகிறது இந்த கேட்ஜெட். சில நாட்களுக்கு இந்த கேட்ஜெட்டை உடலில் இருந்து  எடுக்காமல் இருந்தால் உங்களின் ஒவ்வொரு நிமிட செயல்பாடுகளையும் இந்த கேட்ஜெட்  பதிவு செய்திருக்கும் .

 மோட்டோரோலா மோட்டோ ஏசிடிவி (Motorola MotoActv)

மோட்டோஏசிடிவி ஒரு ஃபிட்னெஸ் டிராக்கர் மற்றும் சிறிய எம்பி3 பிளேயர் ஆகும், இந்த கேட்ஜேட்  ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன்  அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் ஓடும் போதோ அல்லது சைக்களிங் போகும் போதோ, கோல்ஃப் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட செயல்பாடுகளின் போது உங்களின் வேகம், இதயத்துடிப்பு, உடலில் எரிகின்ற கலோரியின் அளவு மற்றும் ஓடுகின்ற ,சைக்கிளில் பயணிக்கின்ற தூரத்தை துல்லியமாக கணக்கிடுகின்றது . எம் பி 3 பிளேயர் 8 ஜி பி மெமரியை கொண்டுள்ளது. இதில் 4,000 பாடல்களை நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் இந்திய விலை ரூ.  8,184

ரீபோக்  ஆர்பி6175டபிள்யூ ஹெச் இன்டச் ஹார்ட் ரேட் மானிட்டர் (Reebok  RB6175WH inTouch Heart Rate Monitor )

ஒரு வாட்ச்சைப் போல கையில் இந்த கேட்ஜெட்டை அணிந்து கொள்ளலாம். உடலில் கலோரி எரிகின்ற அளவையும் , இதயத்துடிப்பையும் துல்லியமாக அளவிட்டுச் சொல்கிறது .இந்த வாட்ச்சை கையில் தொட்டாலே போதும் உடனே உங்களின் இதயத்துடிப்பைத் தெரிவிக்கும்.  இதன் விலை ரூ.6,599.

பியர் ஸ்கொயர் ஒன் (Pear Square One)

நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமுள்ளவரா...? உங்களுக்கு சரியான வழியில் பயிற்சி அளிக்க பயிற்சியாளர் இல்லையா...? கவலையை விடுங்கள்,  இதோ வந்துவிட்டது பியர் ஸ்கொயர் ஒன் . ஒரு ஓட்டப்பந்தய பயிற்சியாளர் போல செயல்படுகிறது இந்த கேட்ஜெட்.  உங்களின் இதயத்துடிப்பு, ஓடுகின்ற வேகத்தை கணக்கிட்டு உங்களின் இலக்கை அடைய சரியான திட்டமிடுதலுக்கு வழி அமைத்து தருகிறது. நம்முடைய பாக்கெட்டில் வைக்கப்படும் வகையில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ.13,134.

ஜிம் வாட்ச்  (gym watch)

ஒரு ஃபிட்னெஸ் டிரெய்னர் போல செயல்படுகிறது இந்த ஜிம் வாட்ச். உடற்பயிற்சி செய்யும் போது உங்களின் ஒவ்வொரு அசைவையும் கணக்கிட்டு உடனடியாக ஒரு ரிசல்ட்டை தருகிறது. தவறாக செய்யும் போது உடனே எச்சரிக்கை தருகிறது. இதன் மூலம்  நீங்கள் செய்கின்ற உடற்பயிற்சியை மேம்படுத்திக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.9,834.

லுமோ லிப்ஃட் (Lumo Lift)

நாம் நிற்கின்ற தோரணை சரியாக இல்லாதபோது அதிர்வுகளை ஏற்படுத்தி,  நேராக நிற்பதற்கு உதவி செய்கிறது லுமோ லிஃப்ட். . பல வண்ணங்களில் கிடைக்கிறது . இதன் விலை ரூ.6,534.

மைமோ பேபி மானிட்டர் (Mimo Baby Monitor)

பிறந்த குழந்தையின்  சுவாசம், உடல் சூடு, உடல் நிலை, தூக்கம் போன்ற செயல்பாடுகளை கண்காணிக்கிறது மைமோ பேபி மானிட்டர். இந்த செய்லபாடுகளை பதிவு செய்து உங்களின் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி வைக்கிறது. இது பெற்றோர்களை விழிப்போடு இருக்க உதவி செய்கிறது. நீங்கள்  உலகத்தின் எந்த மூலையில்  இருந்தாலும் போன் மூலம் உங்களின் குழந்தையின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடியும். உங்களின் குழந்தையின் சுவாசத்திலோ, உடல் நிலையிலோ ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் இந்த கேட்ஜெட் எச்சரிக்கையும் விடுக்கிறது. இதன் விலை ரூ.11,682

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்