Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த் மனநிலைதான் நமக்கு பாதுகாப்பு கவசம் - ஸ்ட்ரெஸ் ரெசிபி

நாம என்னதான் முட்டி மோதினாலும் டார்ச்சர் பண்ற பாஸை நம்மளால மாத்த முடியாது. ஏன்னா அவர்தான் நமக்கு மேலதிகாரி. அதையும் மீறி நமக்கு பிரஷர் தர்ற மேனேஜரை நாம திட்டம் போட்டு டார்ச்சர் பண்ணுவோம்னு கிளம்புனா, ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் திங்கிற சோத்துல மண்ணு விழுந்திரும். அதனால இப்போ நான் என்ன சொல்ல வர்றேன்னா... மெல்லியக் கோட்டுக்கு அந்தப் பக்கம் பாஸ், மேனேஜர், மேல் அதிகாரி, முதலாளி. இந்தப் பக்கம் நாம.

அவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குற மன வலிமையை நாம வளர்த்துக்கிறது எப்படி? இவங்க உருவாக்கும் மன அழுத்தத்தை மண்டையில தட்டி மண்டி போட வைக்கிறது எப்படி? அந்த பிரஷ்ஷர் ரெசிபி இதோ...


எப்போ புராஜெக்ட் முடியும், அடுத்த புராஜெக்டுல இருப்போமா, மாட்டோமான்னு எப்பவும் நம்மளை அந்தரத்துல தொங்குற ஆந்தை மனநிலையிலேயே வெச்சிருப்பாங்க. ஆனா அந்த சூழ்ச்சிக்கு நீங்க பலிகடா ஆகிடாதீங்க. ஆட்டம்னு வந்துட்டா எப்பவும் நாமதான் விஜயகாந்த்தா இருக்கணும். இவர் தி.மு.க. பக்கம் போவாரா, பி.ஜே.பி. பக்கம் சாய்வாரான்னு எல்லாரையும் ஒரு மாசம் கதற விடணும். கடைசில மக்கள் நலக் கூட்டணித் திண்டுல துண்டு போட்டு தூங்கிடணும். அதனால, புராஜெக்ட் வரும்போது வரட்டும். அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு விஜயகாந்த் மனநிலைதான் நமக்கு பாதுகாப்பு கவசம்.

கம்ப்யூட்டருக்கு கீ போட்டு, மவுஸ், மதர் போர்டுனு உதிரி பாகங்கள் இருக்கிறது மாதிரி, நம்மளையும் ஒரு உதிரி பாகமாதான் கம்பெனி நினைக்குது. இந்த உண்மையை முதல்ல நாம புரிஞ்சுக்கணும். அப்பதான் எதிர்பார்ப்பு இருக்காது. இல்லேன்னா, 12 மாடிக் கட்டடத்துல வேலைப் பார்க்குறதுனாலேயே அந்த பில்டிங் பூரா நம்மளுக்கு சொந்தம்னு நினைச்சுக்குவீங்க. அதனால எதிர்பார்ப்புகள் தவிர்.அடுத்ததா, 'வாரம் முழுக்க வேலை...சனிக்கிழமை ஜாலி!' - அப்படின்னு ஐ.டி. வேலைக்கு இவங்களே ஒரு இலக்கணம் வகுத்து உலவ விட்டுருக்காங்க. அதுக்காக நாமளும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சொர்க்க வாசல் திறக்குறதா நினைச்சுக்கிட்டு வாரம் முழுக்க உழைச்சுக் கொட்டுறோம். ஆனால்,  எத்தனை சனி வந்தாலும் நம்மளைப் பிடிச்ச சனி மட்டும் போறதே இல்லை. அதனால சொல்ல வர்றது என்னன்னா... சனிக்கிழமை கொண்டாட்டம் என்பது, நமக்கு முன்னாடி கட்டப்பட்டிருக்கிற கேரட். அது கேரட் என்பதை புரிஞ்சுக்கணும்.

ஓ.கே. கண்மணி நித்யா மேனன் மாதிரி ஒரு பொண்ணு போன் பண்ணி, 'கல்யாணம் பண்ணிக்கலாமா மாமா'ன்னு கேட்டாலும், 'ஒரு தடவை ஆன்சைட் போயிட்டு வந்துடுறேன்'னு சொல்ற பலபேரை நாம பார்க்கிறோம். அப்ஃகோர்ஸ், கல்யாணம் பண்ணிட்டா அப்புறம் சைட் கூட அடிக்க முடியாது என்பதால் அவங்க அப்படி நினைக்கலாம். ஆனால், ஆன்சைட் போறது மட்டுமே வாழ்க்கை லட்சியமா வெச்சிருக்காதீங்க...

அப்ரைசலில் ஒண்ணும் தேறலைன்னா... 'feeling கடுப்'னு ஸ்டேட்டஸ் போட்டுட்டு, விஜய்-அஜித் சண்டையை அரை மணி நேரம் வேடிக்கைப் பார்த்துட்டு, ராஜா சார் பாட்டுக் கேட்டுக்கிட்டு இழுத்துப் போத்திக்கிட்டு தூங்குங்க. நிம்மதியான உறக்கம்,  உடம்பின் மெட்டபாலிசத்தை சரியா பராமரிக்கிறது என்று அமெரிக்காவிலே ஒரு பல்கலைக்கழக ஆய்வு சொல்லியிருக்கிற படியால்... கவலையை மறந்துட்டு தூங்குங்க பாஸ், உடம்புக்கு நல்லது!

- ராஜூ

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement