வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (25/08/2016)

கடைசி தொடர்பு:19:40 (25/08/2016)

தயிரைத் தவிர்க்காமல் இருக்க 10 காரணங்கள்!

                                                          

தயிர், காலங்காலமாக நாம் உண்டுவரும் உணவுப் பொருள். இதை ,  ஓர் எளிய  உணவாகவே மட்டுமே நாம் கருதுகிறோம். ஆனால், அபாரமான  மருத்துவக் குணங்கள் நிறைந்த அற்புத உணவு இது. கோடை காலங்களில் மட்டும் அல்ல. எப்போதுமே தயிரை உணவில் பிரதானமாகச் சேர்ப்பது, இந்தியா போன்ற மித வெப்ப நாட்டில் வசிக்கும் நமக்கு மிகவும் முக்கியம். 

 

1.தயிரில் உள்ள லாக்டோபேசில்  (Lactobacil) எனும் நல்ல பாக்டீரியா செரிமானத்தைத் தூண்டி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது. 

2.குடலில் உருவாகும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, நல்ல பாக்டீரியாவின் உற்பத்திக்கு தயிர் உதவுகிறது. 

3. மதிய வேளை உணவுடன், தயிரை சாப்பிட்டு வந்தால் இதயத்துக்கு நல்லது. ஆனால், தயிரை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

4.மெனோபாஸ் பருவத்தை எட்டும் பெண்களுக்குத் தயிர் மிகவும் தேவையான உணவு. உடலுக்குத் தேவையான கால்சியம் தயிரில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது.

5.தயிரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் தயிரைத் தங்களின் உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

6.கடுமையான அல்சரால் அவதிப்படுபவர்கள் தயிரை உட்கொண்டால், அல்சரில் இருந்து விரைவில் தப்பலாம். அல்சருக்குக் காரணமான கிருமிகள், தயிரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகின்றன.

7.வயிற்றுப்போக்கை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல், தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு இருக்கிறது. 

8.மலம் கழிக்கும்போது கடுமையான எரிச்சலை உணர்பவர்கள், தங்களின் அன்றாட உணவில் தயிரைச் சேர்த்துக்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

9.தயிரில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால்,  சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் நலத்தை மேம்படுத்தும்.

10. தயிரில் புரதங்கள், கால்சியம், வைட்டமின் பி6, பி12  போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன என்பதால் இதை அனைவருமே சாப்பிடலாம்.

 

- தி.ஜெயப்பிரகாஷ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்