காலை உணவை அலட்சியப்படுத்துபவரா? இந்த மினி சர்வே உங்களுக்குத்தான்! #breakfastsurvey

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும்வரை இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் அனைவருமே வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்திற்கான காரணங்கள் பல இருந்தாலும், 'உணவு'க்காக என்பதுதான் பிரதானம். ஆனால், நம்மில் எத்தனைபேர் தினமும் மூன்று வேளைகளிலும் சரியாக சாப்பிடுகிறோம் என்றால், பலர் அதில் கவனம் செலுத்துவதில்லை. இதில் காலை உணவை சாப்பிடுவதில்லை என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் எப்படி? இந்த கீழே இருப்பதில் கவனமாய் தேர்ந்தெடுங்க.

 

 

 

 

'நம் ஆரோக்கியம்....நம் கையில்!'

* சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான உமா ராகவன், "ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றலை கணிசமான அளவுக்கு கொடுப்பவை காலை உணவுதான். அதனை ஏதோ ஒருநாள், இரண்டு நாள் தவிர்த்தால்கூட பரவாயில்லை. தினமும் தவிர்ப்பதால் உடல் சோர்ந்துபோவதுடன் அசிடிட்டியும் அடுத்து உணவு குழாயில் புண் ஏற்பட்டு, அதன் அடுத்த நிலையான அல்சர் ஏற்படக்கூடும். பசியின்போது சாப்பிடாமல், பல மணி நேரம் கழித்து, தேவைக்கு மீறிய அளவில் சாப்பிடும்போது (binge eating)  உடல் பருமன் ஏற்படும்.

* இரவில் அதிகமாகவும், துரித உணவுகளைச் சாப்பிடுவதாலும் காலையில் சரியாக பசி எடுக்காது.

* காலையில் எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவது சிறந்தது. ஒவ்வொரு வேளையிலும் சராசரியாக குறைந்தபட்சம் 10 - 20 நிமிடம் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

* மாறுபட்ட நேரங்களிலும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் சாப்பிடுவதால்தான் நீரிழிவுநோய், இதய நோய்கள், தைராய்டு போன்ற பிரச்னைகள் வருகின்றன. எனவே நம் உடல்நலன் மீது தகுந்த அக்கறையுடன் செயல்பட்டு, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.

- கு.ஆனந்தராஜ்
படம்: ரா.வருண் பிரசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!