Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.சி. அறையில் குழந்தைகள் வளர்வது... சரியா... தவறா? #AC_room_problems

                                                                                                                                 
'சூரிய ஒளியற்ற, இயற்கை காற்றோட்ட வசதியற்ற அடைக்கப்பட்ட ஜன்னல்கள், கதவுகள் கொண்டதாக இருக்கின்றன' பெரும்பாலான பச்சிளம் குழந்தைகள் வளரும் அறைகள். அங்கு ஏசி(air conditioner) காற்றுதான் குழந்தைகளின் சுவாச ஆதாரமாக இருக்கிறது. பிறந்த சில மாதங்கள், சில வருட சூழலிலேயே செயற்கையாக குளிரூட்டப்பட்ட ஏசி காற்றினைச் சுவாசிப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதுதானா என பல பெற்றோர்களுக்கும் எழக்கூடிய சந்தேகத்திற்கு பதிலளிக்கிறார், பவானியைச் சேர்ந்த அரசு பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன்.

* அதிக வெப்பநிலை சூழலில் நாம், அதிலிருந்து விடுபட்டு குளிர்ந்த சூழலை ஏற்படுத்திக்கொள்ள ஏசியை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும் ஏசியை  26-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தும்போது, பெரியவர்கள், குழந்தைகள் என யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது. 

* அதேநேரம் வெயில் அதிகமாக இருக்கிறது என 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக ஏசியை வைக்கும்போது, குளிர்பிரதேசத்தில் இருப்பதுபோன்ற சூழல் இருக்கும். இதுபோன்ற சூழலை பெரியவர்களால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், குழந்தையால் அந்த குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. அதனை அவர்களால் வெளிப்படுத்தவும் முடியாது. திடீரென உடல் நடுக்கம், பசி உணர்வு குறைந்து தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகள்தான் குழந்தையிடம் இருந்து தெரியும்.

* அதேநேரம் அடிக்கடி ஏசியிலேயே இருக்கும் குழந்தையை வெளிநிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும்போது, அங்கு நிலவக்கூடிய வெப்பநிலையை குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தலைவலி, மயக்கம், அதிக வியர்வை வருதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு குழந்தையின் உடல்நிலை பாதிப்படையவும் வாய்ப்பிருக்கிறது. 

* குழந்தை உறங்கும் ஏசி அறை சூரிய வெளிச்சமும், காற்றும் புகாத வகையில் இருக்கும். இதனால் அந்த அறையிலோ அல்லது அந்த அறைக்குள் நுழைபவரின் மூலமாகவோ எதாவது தூசி, குப்பைகள் வந்தால் அவை அப்படியே அங்கிருக்கும் துணிகளில் படிந்துவிடும். நாளடைவில் அந்த தூசியானது அப்படியே தங்கி, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளாக மாறலாம். அதனாலும், ஒருவேளை அந்த அறையில் யாராவது தும்மினால்கூட குழந்தைக்கு 'ஏர் கன்டிஷனிங் லங் டிசிஸ் (air conditioning lung disease) எனப்படும் சில அபூர்வமான பாக்டீயாக்களினால் கிருமித் தொற்று பிரச்னைகள் ஏற்படலாம். 

* குழந்தை படுக்கும் தொட்டில், பயன்படுத்தும் உடைகள், விளையாட்டுப் பொருட்களைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அதுபோல குழந்தையின் அறையை 2-3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்துவிட வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் இருமுறையாவது ஒருமணி நேரத்திற்கும் குறையாமல் ஏசியை ஆஃப் செய்துவிட்டு, ஜன்னல், கதவுகளை திறந்துவிட்டு சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் அந்த அறையின் உள்ளே நன்றாக வரும்படி செய்ய வேண்டும். 

* ஏசி அறையில் வெளிச்சத்திற்காக அடிக்கடி விளக்குகளை எரியவிடுவதால், குழந்தையால் சரியாக தூங்க முடியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே தேவையற்ற சமயங்களில் விளக்குகளை எரியவிடாமல், குறைந்தபட்ச சூரிய வெளிச்சம் அந்த அறையில் இருக்கும்படியான சூழலை ஏற்படுத்துங்கள்.  

* குறைப் பிரசவத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, எடைக் குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு தெர்மோ ரெகுலேஷன் எனப்படக் கூடிய உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் இயக்கம் சரியாக வேலை செய்யாது. இத்தகைய குழந்தைகளுக்கு திடீரென உடல் வெப்பநிலை குறைந்தால் உடனே கை, கால்கள் குளிர்ச்சியாகிவிடும். உடல் வெப்பநிலை அதிகமானால் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். இதனால் பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் உடலுக்கு போதிய வெப்பநிலையும், குளிர்ச்சியும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.  

* சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோருக்கும் சூரிய வெளிச்சம் நம் உடல் மீது பட்டாலே பெரும்பாலான வியாதிகளின் வருகை இல்லாமல் போகும். குறிப்பாக தினமும் காலையிலும், மாலையிலும் குழந்தையை அரை மணிநேரமாவது இளம் வெயிலில் காட்டும்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை போன்ற பல பிரச்னைகளை வராமல் தடுக்க முடியும். 

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement