இதைக் கழுத்தில் அணிந்தால்..... கொசு கடிக்காதாம்!

இன்று எதற்கு பயப்படுகிறோமோ இல்லையோ கொசுவுக்கு ரொம்பவே பயப்படுகிறோம்.தினமும் இரவு நேரங்களில் கொசு கடித்துவிடாமல் இருக்க கிரீம் லோஷன் பூசுவது, கொசு வலை பயன்படுத்துவது, கொசு பேட் பயன்படுத்துவது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எவ்வளவு முயற்சித்தாலும் கொசுக்களிடமிருந்து நம்மால் பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை. கொசு கடிப்பதன் வாயிலாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கான ஒரு தீர்வை கண்டிபிடித்திருக்கிறார்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூவல்லரி உற்பத்தியாளர்கள்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இதுவரை 275 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 67 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் Aedes aegypti கொசுவானது பல்கி பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை மனதில் கொண்டுதான் சிங்கப்பூரின் ஜூவல்லரி தயாரிப்பு நிறுவனம் ஒன்று கொசுவை விரட்டும் ஜுவல்லரிகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. பச்சை நிறங்களில் ஒன்றான, jade-colore கழுத்து செயின் மற்றும் கையில் அணியப்படும் பிரேஸ்லெட்டையும் தயாரித்திருக்கிறார்கள். இந்த செயினின் டாலரை  ஏழுநாட்கள் வரை உபயோகிக்கலாம். அதாவது ஒரு வாரத்திற்கு. பிறகு, வேறு டாலரை மாற்றிக் கொள்ளலாம். citronella  oli ஐ இந்த டாலரில் சேர்த்திருக்கிறார்கள்.இந்த ஆயிலானது கொசு விரட்டியாகச் செயல்படுகிறது. இந்த செயின் அல்லது பிரேஸ்லெட்டை அணியும் போது நம்மை சுற்றி சிறிது தூரத்திற்கு கொசுவானது பக்கத்தில் வரவே வராது. மாலை நேரம் அணிந்து, காலையில் கழற்றி வைக்கலாம் அல்லது நாள் முழுவதும் அணியவும் செய்யலாம். இந்த ஜூவல்லரியின் விலை 2346 ரூபாய் முதல் 3177 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பிரேஸ்லெட்டின் விலை 240 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கம்பெனியின் நிறுவனர் Trixie Khong, 'தற்காப்பு மற்றும் ஃபேஷன் இரண்டையும் இணைத்து இந்த ஜூவல்லரியை உருவாக்கியுள்ளோம். ஒரு பெண்ணாக நான் அணியும் ஜூவல்லரிகளில் வித்தியாசம் காண்பிக்கிறேன். அதையே ஒரு பாதுகாப்பான விஷயமாக மாற்றினால் என்ன? என்ற மாற்று யோசனையால் உருவானதுதான் ஜூவல்லரி. இந்த டாலர் செயின் மற்றும் பிரேஸ்லெட் உடனுக்குடன் விற்று தீர்ந்துவிடுவதால், BY INVITE ONLY ONLINE ஆர்டரின் பேரிலேயே ஜூவல்லரிகளை தயாரிக்கிறோம்' என்கிறார் Trixie Khong.

-வே.கிருஷ்ணவேணி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!