Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜென் Z தலைமுறையை பாதிக்கும் ஆன்லைன் ஷாப்பிங் மேனியா!

சம்யுக்தாவுக்கு 21 வயது. மாடர்ன் யுவதி. ஒரே மகள் என்பதால் வீட்டில் மிகவும் செல்லம். பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், குழந்தையிடம் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் அவள் கேட்டதை எல்லாம் வாங்கித் தருவார்கள். சிறுவயதில் இருந்தே பாக்கெட் மணி கிடைக்கும். கல்லூரி நாட்களில் தோழிகளுடன் ஷாப்பிங் மால்களில் ரவுண்ட் அடிப்பார். கையில் எப்போதும் பணம் இருக்கும் என்பதால் ஆடைகள், காஸ்மெடிக்ஸ், சாக்லேட்ஸ் என்று கண்டதையும் வாங்கிக் குவிப்பார்.  
கல்லூரி முடிந்ததும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கணிப்பொறியிலேயே மூழ்கிக்கிடக்கும் வேலை. கை நிறைய காசு. ஒருமுறை, தோழி ஒருவருக்கு செல்போன் வாங்கித் தருவதற்காக ஆன்லைன் ஷாப்பிங் தளத்துக்குச் செல்ல, பிறகு அதுவே வாடிக்கையானது. தேவை இருக்கிறதோ இல்லையோ, பொருட்களாக வாங்கிக் குவித்தார். ஏற்கெனவே உள்ள பொருட்கள் என்றாலும், வேறு டிசைன் என்பதற்காக வாங்கினார். ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல் தேவையில்லாத பொருட்களையும் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் வாங்குவதை நிறுத்தவில்லை. வீட்டுக்கு டெலிவரியாவதைத் தவிர்த்து, அலுவலகத்துக்கு வரும்படி செய்துகொண்டார். வாங்கியதை வீட்டுக்கும் கொண்டுவரமாட்டார். ஒரு சிக்கலான சூழலில், சம்யுக்தாவினின் வங்கிக்கணக்கை பரிசோதிக்கும்போது, பணம் இல்லாதததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் அவளது பெற்றோர். பணத்தை என்ன செய்தாய்? என்று கேட்டபோது, கூலாக ・ஷாப்பிங் செய்தேன்・என்றார் சம்யுக்தா. அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்யுக்தாவை என்னிடம் அழைத்து வந்தனர்.

சம்யுக்தாவுக்கு மட்டும் அல்ல, இன்றைய தலைமுறையினர் அனைவரிடமும் தேவையிருக்கிறதோ இல்லையோ பொருட்கள் வாங்கும் மோகம் அதிகமாக உள்ளது. உண்மையில், இது ஓர் மனநலப் பிரச்னை. இதன் பெயர் ・ஓனியோமேனியா・(Oniomania) அல்லது கம்பல்ஸிவ் பையிங் டிஸ்ஆர்டர் (Compulsive buying disorder-CBD).  

ஆன்லைன் ஷாப்பிங் மேனியா யார் யாருக்கு வரும்?
பெற்றோர் சிறு வயதில் இருந்தே தங்கள் பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழகினால், அதிக பாக்கெட்மணி கொடுத்துப் பழகினால், அவர்களுக்கு ஷாப்பிங் மேனியா வரலாம். அதேபோல், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் குழந்தைகளை ஈர்ப்பது ஆன்லைன் ஷாப்பிங்தான். சந்தையில் நான்கு கடைகள் ஏறி, இறங்கி வாங்க வேண்டிய பொருட்கள் வீட்டிலேயே டோர் டெலிவரி செய்யப்படுவதால், படிப்பு முடித்து சம்பாதிக்கத் தொடங்கிய பின்னர், டெபிட் கார்டில் பணம் வந்தவுடன் அவர்களது ஆன்லைன் ஆடம்பரச் செலவுகள் தொடங்கிவிடுகின்றன.

சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்பவர்கள், ஒதுக்கப்படுபவர்கள் தங்களது தனிமையைப் போக்கிக்கொள்ள ஏதாவது வழி தேடுவர். சிலர் புகை, மதுப்பழக்கம், இன்னும் சிலரோ சூதாட்டம், போதைப் பழக்கம் ஆகியவற்றுக்கு அடிமையாவர். அதுபோல கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள், தொடர்ந்து ஷாப்பிங் செய்வது மூலமாகத் தனிமையைப் போக்க நினைப்பார்கள். மகன், மருமகள், பேரன் ஆகியோர் வேலைக்குச் சென்ற பிறகு, வயதான பெற்றோர்கள் தனிமையால் அவதிப்படுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் உபயோகிப்பது பற்றியும், ஆன்லைன் ஷாப்பிங் பற்றியும் யாராவது கற்றுக் கொடுத்தால், தொடர்ந்து ஷாப்பிங் செய்வதன் மூலம் தனிமையை விரட்ட நினைத்து, அவர்கள் சி.பி.டி பாதிக்கப்பட்டவர்களாக மாற வாய்ப்புள்ளது.

இந்த ஷாப்பிங் மேனியாவால் தேவைக்கு அதிகமான பொருட்கள் வாங்கிக் குவித்துவிட்டு, வங்கியின் வீட்டுக்கடன், கார் ஈ.எம்.ஐ உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடன்பட்டு, சமூகத்தில் அவமானத்திற்கு ஆளாவார்கள்.

மேலை நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். பிரபல தொழில் நிறுவனங்களும் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்க முன்வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை வரை சென்றுள்ளனர். வருமானத்துக்கு மிகவும் சிரமப்படுபவர்களுக்கு, திடீரென அதிகச் சம்பளத்தில் வேலை கிடைக்கும்போதும், சம்பள உயர்வு பெறும்போதும் தன்னால் எதையும் விலை கொடுத்து வாங்க முடியும் என்ற எண்ணம் வரும். இவர்களது கவனம் முதலில் ஆன்லைன் பொருட்கள் மீதே செல்லும். சிபிடி வர இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மன அழுத்தம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, தனிமை, விரக்தி, நேரத்துக்கு தூங்காமல் இருப்பது, சுய இரக்கம், குற்ற உணர்வு, குழந்தைப் பருவ கெட்ட நினைவுகள் எனப் பல காரணங்கள் உள்ளன.  

சிலர் அலுவலக வேலையால் மனஅழுத்தம் அதிகமாகி, அதனைப் போக்க இதுபோன்ற ஆன்லைன் பொருட்களை வாங்கி, தற்காலிக சந்தோஷம் அடைவார்கள். இந்தச் சந்தோஷம் நிலையில்லாதது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் வேறு ஏதாவது பொருளை வாங்கத் துவங்குவர்.

சிபிடியிலிருந்து விடுபட ஸ்கீஸோபெர்னியா (schizophrenia), பைபோலார் டிஸார்டர் (bipolar disorder) போன்ற முற்றிய மன வியாதிகள் அளவுக்கு இது அதிக அபாயம் உடையது அல்ல. சில மனநல தெரப்பிகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்.
அலுவலகத்தில் கணினி முன் வேலை பார்க்கும்போது, இணையதளங்களில் வரும் கண்கவர் விளம்பரங்கள்,   நம்மை வாங்கத் தூண்டும். எனவே, கணிப்பொறியில் தேவையற்ற லின்க்குகளை கிளிக் செய்யாதீர்கள்.  
இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்று சந்தேகம் ஏற்பட்டால், முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆன்லைன் அப்ளிகேஷன்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய வேண்டும். பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பை மிகக் குறைந்த அளவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒருசில சி.பி.டி நோயாளிகள், தாங்கள் பாதிக்கப்பட்டதை உணர்வார்கள். இவர்கள் தானாகவே மனநல மருத்துவர்களை அணுகுவார்கள். தொடர் மருந்துகள் மற்றும் கவுன்சலிங் மூலம் அவர்களின் ஆழ்மன எண்ணங்களை அறிந்து தீர்வு காண முடியும். 

 

 

 

இவ்வாறு அதீத செலவு செய்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால், உடனே மனநல மருத்துவரிடம் அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து செல்லவேண்டும் என்பதில்லை. முதலில் வீட்டுப் பெரியவர்கள் மூலமாகவோ அல்லது குடும்ப மருத்துவரை வைத்தோ பேசிப் புரிய வைக்க முயலலாம். யார் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து ஆன்லைன் பொருட்கள் வாங்கிக் குவித்துக் கடன்படும் நிலை வரும்போது, மனநல கவுன்சலிங்தான் ஒரே வழி.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close