Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்கள் பத்திரம்.. சர்க்கரை நோயாளிகளின் கவனத்துக்கு!

றவினர், நண்பர்களில் சர்க்கரை நோய் உள்ளவர்களை சந்திக்கும்போது, “உடலில் எங்கேயும் புண் ஏற்படாம பார்த்துக்கோங்க, காயம்பட்டால் சீக்கிரம் ஆறாது” என்று பாசம் கலந்த ஆலோசனை சொல்வது வழக்கம். உலக அளவில் கால் அகற்று அறுவைசிகிச்சை அதிக அளவில் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது சர்க்கரை நோய். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் தொடர்ந்து சர்க்கரை அளவு அதிகரித்து இருக்கும்போது உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. இதில் அதிக அளவில் வெளியே தெரிவது பாத பிரச்னைகள்தான்.

கால்களில் உள்ள மெல்லிய ரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் போதுமான ரத்த ஓட்டம் இருப்பது இல்லை. மேலும், நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணர்ச்சிகள் தெரியாமல் போகிறது. இதனால், காயம் ஏற்பட்டால் நமக்கு தெரிவதும் இல்லை, எளிதில் ஆறுவதும் இல்லை. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் கிருமிகள் வளர கொண்டாட்டமான சூழல் ஏற்படுகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளில் சராசரியாக 90 சதவிகிதம் பேர் காலில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 10 சதவிகிதத்தினருக்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது; 4 சதவிகிதத்தினருக்கு காலையே அகற்றும் நிலை ஏற்படுகிறது” என்கிறது எம்.விஸ்வநாதன் சர்க்கரை நோய் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வு. 

இந்த ஆய்வு முடிவு குறித்து மருத்துவமனையின் முதன்மை சர்க்கரை நோய் நிபுணரான டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறுகையில், “மனித உடலில் மொத்தம் 27 எலும்புகள், 19 தசைகள், 32 தசை இணைப்புகள் கொண்ட உறுப்பு கால். இதை அகற்றிவிட்டால், அன்றாட வாழ்க்கையே சுமையாகிவிடும். கால்களில் தொற்றோடு வருபவர்களுக்கு, ‘பெடிக்யூர்’ முறையில் கால்கள் நன்றாகக் கழுவப்பட்டு, பின்னர் அதி அழுத்த பிராணவாயு (hyperbar oxygen unit) மற்றும் காந்த சிகிச்சை அளிக்கப்படும். இதனால், நோய்தொற்று குணப்படுத்தப்படும். பின்னர், அவர்கள் சாதாரண காலணிகளைத் தவிர்த்து, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட காலணிகளை அணிய வேண்டும். தொடர் கண்காணிப்பு, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது போன்றவை மூலம் கால்களை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவதைத் தவிர்க்க முடியும்” என்ற டாக்டர், இதற்கான ஐந்து வழிகளைச் சொன்னார்.

பாதம் பராமரிக்க...
1. பாதங்களில் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படாதவாறு, பாதுகாப்பாக நடக்க வேண்டும். எங்கேயும் எப்போதும் காலணி அணிந்து செல்ல வேண்டும்.
2. பாதங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். காலில் பார்க்க முடியாத இடங்களை கண்ணாடி துணைக்கொண்டு பார்க்கலாம் அல்லது உறவினர்களைப் பார்க்கச் சொல்லி காயம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
3. பாதங்களில் தினமும் மாய்ஸ்சரைசர் தடவிக்கொள்ள வேண்டும்.
4. காலுக்கு பொருத்தமான காலணிகளை அணிவது அவசியம். காலணிகளை மாலை நேரத்தில் வாங்குவது நல்லது
5. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உணவு, மருந்து போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. காயம் ஏற்பட்டிருந்தால் சுய மருத்துவம் தவிர்த்து உடனே சிகிச்சை பெற வேண்டும்.

- எஸ்.எம்.கோமதி (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: சி.சதிஷ்குமார் (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close