காய்ச்சல் உள்ளவர்களை பட்டினி போடக்கூடாது  | Why should you eat When you feel sick ?

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (17/10/2016)

கடைசி தொடர்பு:12:12 (17/10/2016)

காய்ச்சல் உள்ளவர்களை பட்டினி போடக்கூடாது 

காய்ச்சல் அறிகுறி இருந்தால் குழந்தைகளை பட்டினி போடக்கூடாது என்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவனை இயக்குநர் டாக்டர் டி.சாமிநாதன் அறிவுறுத்தி உள்ளார். காய்ச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று கூறி பெற்றோர் பட்டினி போடுகிறார்கள்.இது முற்றிலும் தவறு. மாறாக, அவர்களுக்கு உணவு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலும், காய்ச்சல் உள்ளவர்கள், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சோர்வடையாமல், உடன் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி அவசியமாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க