குழந்தைகள் ஒருநாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? | How many eggs per day for a child?

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (19/10/2016)

கடைசி தொடர்பு:16:47 (19/10/2016)

குழந்தைகள் ஒருநாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?


" என் பையன் சரியாவே சாப்பிட மாட்டேங்கிறான்!"
பெரும்பாலான பெற்றோர்களின் கவலையே இதுவாகத்தான் இருக்கும். குழந்தைகள் விளையாட்டிக்கொண்டே இருப்பதால், சாப்பிடுவதைக் கண்டுக் கொள்வதேயில்லை. ஸ்நாக்ஸை விரும்பும் குழந்தைகள் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அதனால், குழந்தைகள் சாப்பிடும் குறைவான உணவில், அவர்களுக்குத் தேவையான முழு சத்துகளும் கிடைக்கும் விதத்தில் என்ன கொடுக்கலாம் எனப் பெற்றோர்கள் ஆராயத் தொடங்குகின்றனர்.
காய்கறிகள் அதிகம் கொடுங்க...
பால் நிறைய குடிக்கச் சொல்லுங்க...
என ஏராளமான யோசனைகள் வந்தவண்ணமே இருக்கும். சிலர் 'தினமும் முட்டை சாப்பிடச் சொல்லுங்க... என்பார்கள். வேறு சிலர் "ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடச் சொல்லுங்க" என்பார்கள். இன்னும் சிலர் "முட்டையே கொடுக்காதீங்க.." என்பார்கள். இவை அனைத்துக்கும் மேல் எது நல்ல முட்டை என்று வேறு சந்தேகம்.

முடிவாக என்னதான் செய்வது எனக் குழம்பும் பெற்றோர்களுக்கு டயட்டிஷியன் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுகிறார்.

 

முட்டையில் பலவித சத்துகள் இருக்கின்றன. எனவே குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்தே முட்டையைச் சாப்பிடக் கொடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்றவாறு முட்டை சாப்பிடும் அளவு மாறும். எனவே அதைத் தெரிந்துகொண்டு கொடுப்பது நல்லது.

குழந்தைகள், எந்த வயதில் எத்தனை முட்டைகள் வரை சாப்பிடலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்கவும்.

 

 

சாப்பிடும் விதம்: முட்டையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடக் கூடாது. அதேபோல முழுமையாக வேக வைக்கவும் கூடாது. அரை வேக்காட்டில் சாப்பிடுவது நல்லது. முட்டைப் பொறியல், ஒரு பக்கம் மட்டும் வெந்த நிலையில் சாப்பிடுவது அதன் முழுமையான பலனைத் தரும்.

பயன்கள்: முட்டை கால்சியம், புரோட்டின், வைட்டமின் B12, குளோரின், மெக்னீஷியம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான பல சக்திகளைத் தருகிறது. இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது.

 

தவிர்க்க வேண்டியது: மேலே பட்டியலில் உள்ள வயதுக்கு ஏற்ற அளாவில் குழந்தைகளுக்கு முட்டையைச் சாப்பிடத் தருவது நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று எனக் கொடுத்தால் கொழுப்புச் சத்து அதிகரித்து விடும்.

கவனம்: முட்டையை வெளியில் வைத்திருப்பதை விட, குளிர்ச்சியாக ஃப்ரிட்ஜில் வைப்பதே நல்லது. முட்டையைச் சமைக்கும்முன் அது கெட்டுப் போகவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

- வி.எஸ்.சரவணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்