வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (07/11/2016)

கடைசி தொடர்பு:11:05 (07/11/2016)

ஆரோக்கியமான நகம் வேண்டுமா?


பல பெண்களுக்கு உடையாத நகம் இருக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. என்னதான் மெனிக்கியூர், பெடிக்கியூர் என நகங்களுக்காக ஸ்பெஷல் அக்கறை எடுத்துக் கொண்டாலும், எதாவது ஒரு வேலை செய்யும் போது பல நாட்களாக பாதுகாப்பாக வைத்திருந்த நகம் படக்கென உடைந்து 'பக்'கென அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும்.  இன்னும் சிலருக்கு மிகவும் கடினமாக நகம் வளர்ந்திருக்கும். இதற்கு காரணம் நம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாததே காரணம். நகத்தை வளர்க்க எளிதாக வீட்டிலேயே சில விஷயங்களை மேற்கொள்ளலாம். ஒரு வாரம் வரை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக, பாதாம் எண்ணெயை லேசாக சூடு செய்து காட்டன் கொண்டு விரல் நகங்களின் மேல் தொட்டு வைக்கவும். இதுவே நகம் கடினமாக உள்ளவர்கள் என்றால் ஆலீவ் ஆயிலைப் பயன்படுத்தலாம். 

வாரத்திற்கு ஒரு முறை நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை அகற்றி, நகத்தை ஷேப் செய்யவும். ஷேப் செய்ய விரும்பாதவர்கள், அதிமாக வளரும் நகங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ந்திருக்கும் நகத்தை கட் செய்யலாம். அதே போல அடிக்கடி நெயில் பாலிஷ் போட வேண்டாம். நகங்களுக்கும் சுவாசிக்கும் தன்மை இருப்பதால், அவற்றை நெயில் பாலிஷ் போட்டு மூடிவிட வேண்டாம். நகங்களை சுற்றி உள்ள சதைகள் அடிக்கடி கிழிவது போல காணப்பட்டால் உங்கள் உடலில் நீர் சத்து குறைந்து வருகிறது என்று அர்த்தம். ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பதை தவிர்க்காதீர்கள். இன்னும் சிலருக்கு நகச்சுத்தி வரும் வாய்ப்புகளும் இருக்கும். இவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது விரல்களுக்கு மருதாணி இட்டுக் கொள்ளுவது நல்லது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க