மாதவிடாய் நாட்களில் சோர்வை போக்கும் உளுந்தங்கஞ்சி! - செய்முறை

 

 

நியூட்ரிசியன் ப்ரியா ராஜேந்திரன் தரும் உளுந்த கஞ்சி பலன்கள்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வுக்கு, பெண்கள் இப்போது மருத்துவர்களிடம் மாத்திரை தரச்சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால், இதற்கு இயற்கையான தீர்வான , புரதம் நிறைந்த உணவான, வீட்டிலேயே இருக்கூடிய உளுந்தம்பருப்பு பால் கஞ்சி. அதன் செய்முறையை வழங்குகிறார், விருதுநகரைச் சேர்ந்த பாலா.

தேவையானவை:

வெள்ளை உளுந்து - கால் கப்
காய்ச்சிய பால் - ஒரு கப்
கருப்பட்டி - 60 கிராம்
பூண்டு தோல் நீக்கியது - 4 பல்
தண்ணீர் - ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
புழுங்கல் அரிசி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்


 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, வெந்தயம், வெள்ளை உளுந்து, அரிசி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, பொன்நிறமாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். பின் அடிகனமான ஒரு பாத்திரத்தில் வறுத்துவைத்த வெந்தயம், உளுந்து, அரிசி, பூண்டுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழைய வேகவிடவும் (குக்கரில் வேகவைத்தால் 4 விசில் வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்). உளுந்துக் கலவை வெந்ததும் அத்துடன் ஏலக்காய்த்தூள், கருப்பட்டி, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதில் பால் சேர்த்துச் சாப்பிடவும். 
 

- சு.சூர்யா கோமதி
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!