குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமானதா?

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை கட்டாயமாக தாய் பால் மட்டும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

அதே நேரத்தில் கொழுகொழுவென குண்டாக இருக்கும் குழந்தைகள் தான் ஆரோக்கியமான குழந்தைகள் என பல பெற்றொர்களும் எண்ணுகின்றனர். ஆனால் இது தவறாகும். சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரப்பதில்லை. இவர்கள் வீணாக கவலையடையத் தேவையில்லை. இதற்கான இயற்கையே சில உணவுகளை வழங்கியுள்ளது. முக்கியமாக தாய்ப்பால் சுரக்காதவர்கள் பூண்டு எடுத்துக் கொள்ளலாம். இது பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மையுடையது. குறைந்தது 6 மாத காலம் வரைக்கும் குழந்தைக்கு தாய்ப்பாலினை மாத்திரம் வழங்கிய பின்னர், சில மாற்று உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். 

குழந்தைக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்றும் சில இருக்கின்றன. அதிக அளவில் இனிப்பு சுவையுள்ள உணவுகளை வழங்குவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தது கொழுப்புச் சத்துள்ள உணவுகள். இவ்வகையான உணவுகள் உங்களின் குழந்தைகளை குண்டாக்கச் செய்யும். குழந்தைகள் குண்டாக இருப்பது உண்மையாகவே அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதொன்றல்ல. வயதுக்கேற்ற நிறையும் உடல் அளவும் கொண்டிருப்பது தான் மிகவும் சிறந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!