குழந்தைகள் குண்டாக இருப்பது ஆரோக்கியம்தானா? #ChildCare | Will obesity is good for your child health?

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (16/11/2016)

கடைசி தொடர்பு:10:03 (17/11/2016)

குழந்தைகள் குண்டாக இருப்பது ஆரோக்கியம்தானா? #ChildCare

''பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென குண்டாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்தால் அது தவறு'' என்கிறார், சீனியர் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.

''சொல்லப்போனால், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் அந்தப் பருமனுக்குக் காரணமாக இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய உணவுகளில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் வயதுக்கேற்ற உயரம், எடையுடன் இருப்பது முக்கியம்'' என்று வலியுறுத்தும் கிருஷ்ணமூர்த்தி, குழந்தைகளுக்கு ஏற்படும் ஒபிஸிட்டியைத் தவிர்க்கும் ஆலோசனைகள் தந்தார்.

* ''இன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் டி.வி, வீடியோ கேம்ஸ், மொபைல் என்று வீட்டிற்குளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் இருந்தால்தான் ஒபிஸிட்டியைத் தவிர்க்க முடியும். அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது விளையாடவிடவேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் சேர்க்கலாம். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் இயக்கம் கிடைத்து குழந்தை சுறுசுறுப்பாவதுடன் எடையும் அதிகரிக்கது.

* அந்தக் காலத்திலும் ஜங் ஃபுட் இருந்தன. ஆனால், மிட்டாய், கமரக்கட்டு, குச்சி ஐஸ் என அவை மிகக் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால் இப்போது குழந்தைகளை தங்கள் வாடிக்கையாளர்களாகக் குறிவைத்தே பல நிறுவனங்கள் களத்தில் இறங்கி ஜங் ஃபுட்களை வாரி இரைத்துள்ளன. பீட்ஸா, பர்கர், லேஸ், ஃப்ரைடு அயிட்டம்ஸ், க்ரீம் கேக், ஐஸ்க்ரீம் என இதுபோன்ற உணவுகளை பெற்றோர்கள் வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவு வகைகளில் வைட்டமின்கள், புரோடீன்கள், நார்ச்சத்து போன்ற எந்த ஊட்டச்சத்தும் உடலக்குக் கிடைக்காது. வெறும் கொழுப்புச் சத்தும், மாவுச் சத்தும் மட்டுமே கொண்ட இந்த உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் பருமன் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்:

 

* சரியான நேரத்துக்கு குழந்தைகளை சாப்பிடச்செய்யும் பழக்கமும் முக்கியமானது. காலையில் பள்ளி கிளம்பும் அவசரத்தில் குழந்தைகள் சாப்பிடாமல் செல்வது மிகத் தவறு. காலை வேளையில் உடலுக்கு அதிக எனர்ஜி தேவைப்படும். எனவே, காலை 8 மணிக்குள்  அவர்களை சாப்பிடவைத்துவிட வேண்டும். இல்லை என்றால் செல்கள் பலவீனமாகி எனர்ஜி குறைந்துவிடும்(Energy metabolism). மேலும், காலையில் சாப்பிடாமல் மதியம் சாப்பிடும்போது அதிக உணவு எடுத்துக்கொள்வது, இரவு நேரங்கழித்துச் சாப்பிடுவது அல்லது சாப்பிட்டவுடன் தூங்கச்செல்வது போன்றவையும் குழந்தைகளுக்கு எடை அதிகரிக்கச் செய்யும். எனவே, குழந்தைகளை நேரத்துக்குச் சாப்பிட வைக்கவும்.

* பெப்சி, கோலா, பாட்டில் ஜூஸ், பாக்கெட்  ஜூஸ் என கண்டதையும் சாப்பிடப் பழக்காமல், பிள்ளைகளிடம்  பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை வளர்ப்பது நல்லது. உணவு வேளை தவிர்த்து, காலை, மாலை மற்றும் உறங்கச் செல்லும் முன் பழங்கள் சாப்பிடக் கொடுக்கலாம்.

* பெற்றோர் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்... குழந்தைக்கு பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டை வைத்துத் திணிக்கக் கூடாது. அதேபோல பசி எடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பருமன் தவிர்த்து உடலை ஆரோக்கியமாகவும் இளைமையாகவும் வைத்துக்கொள்ளும் வழிமுறைகள் அறிய, கீழே இருக்கும் வீடியோவைக்  க்ளிக் செய்யுங்கள்!


உடல் பருமனைத் தடுக்க அடிப்படை விதிகள்:

* உணவை நேரத்துக்குச் சாப்பிடவேண்டும்.

* நாம் சாப்பிடும் உணவு, தரமானதாகவும் அளவோடும் இருக்கவேண்டும்.

* சாப்பிடாமல் உணவை ஸ்கிப் செய்யக்கூடாது. அதே சமயம் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.

* காலையில் கால் மணி நேரம் உடற்பயிற்சி, அரை மணி நேரம் நடைபயிற்சி அவசியம்.

இவை நான்கையும் தினமும் பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்கும்.

- என். மல்லிகார்ஜூனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்