Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த புயல் மழை சமயம் நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? #RainAlertTips

மழை

 • மழை அதிகரித்துள்ள நேரங்களில், கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள், நீர்நிலைக்கு அருகில் உள்ளவர்கள் அரசு அறிவித்திருக்கும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்.
 • இருசக்கரவாகனம் ஓட்டுபவர்கள், 30 கிமிக்கு மேல் வேகமாக ஓட்ட வேண்டாம். நீர் தேங்கியிருக்கும் இடங்களில் வேகமாகச் செல்வதால், அருகில் உள்ளவர்கள்மேல் தண்ணீர் தெளித்து, தொற்றுக்கள் பரவலாம். அதீத வேகம் உங்களுக்கும் ஆபத்தாக முடியலாம்.
 • இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது, சைடு ஸ்டாண்டு போடாமல் இருப்பது நல்லது. இதனால் ரோட்டில் தேங்கியிருக்கும் தண்ணீர், என்ஜினின் உள்ளே செல்வது தடுக்கப்படும். பயணத்தின்போது வண்டி பாதியிலேயே நின்று தொல்லை தராது.
 • மரங்களின் கீழ் யாரும் நிற்க வேண்டாம். இருசக்கர வாகனங்களையும் நிறுத்தவேண்டாம். மேலும் கரண்டு கம்பம், டிரான்ஸ்ஃபார்மர் அருகில் நிற்பதும் பாதுகாப்பானது அல்ல.
 • வீட்டைவிட்டு வெளியில் சென்றால், கேஸ், ப்ரிட்ஜ் போன்றவற்றை ஆஃப் செய்துவிட்டு வெளியில் செல்வது நல்லது.
 • வெளியில் செல்பவர்கள் ஷூ, சாக்ஸ், லெதர் செருப்பு, ஹீல்ஸ் அணிவதைத் தவிர்த்து கிரிப் வைத்த ரப்பர் அல்லது பிளாஸ்டிக் செருப்புகளை அணியலாம்.
 • விட்டில் உள்ள முதியோர்கள், குழந்தைகளுக்கு திடீர் குளிர்க்காய்ச்சல், சளி, தும்மல், தொண்டைவலி, சைனஸ், தலைவலி ஏற்பட்டால், '104' என்ற அவசரஉதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு மருத்துவஉதவி பெறலாம்.
 • பச்சிளம் குழந்தைகளுக்கு கை, கால்களில் சாக்ஸ் அணிவித்து பாதுகாப்பாக மெத்தையில் படுக்கவையுங்கள்.
 • வீட்டினுள் வழுக்கலான தரை இருந்தால், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரை கிரிப்சோல் கொண்ட காலணிகள் அணிந்து நடக்கச்சொல்லுங்கள்.

 • ஒரு பிளாஸ்டிக் கவரில் தேவையான மருந்துகள், சானிடரி நாப்கின், ஸ்கேன் ரிப்போர்ட், மருந்து சீட்டுகள், குழந்தைகளுக்கான சிரப், டிராப்ஸ் போன்றவற்றை பத்திரமாக எடுத்துவையுங்கள். இதனுடன் இன்னொரு கவரில் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, ஆதார்கார்டு, ரேஷன்கார்டு ஆகிய முக்கிய அடையாள அட்டைகளையும் எடுத்து வையுங்கள்.
 • மின் இணைப்பு துண்டிக்கப்படலாம். மொபைலில் சார்ஜ் ஏற்றிக்கொள்வது நல்லது. அரசு அறிவித்திக்கிருக்கும் உதவி எண்களை மொபைலில் சேவ் செய்து வைத்திருங்கள். பயன்படுத்தாத சமயங்களில் மொபைல் நெட்டை ஆஃப் செய்து வைத்திருந்தால் டேட்டா மற்றும் மொபைல் சார்ஜ் வீணாகாது.
 • வீட்டு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிவைத்திருங்கள். வீட்டில் குழந்தகளுக்குத் தேவையான பால், தயிர், பிரெட், பிஸ்கெட் போன்றவற்றை இருப்பில் வைத்திருங்கள்.
 • தவிர்க்கமுடியாத சூழலில், வெளியில் செல்லநேர்ந்தால் குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்வது அவசியம். சில பிளாஸ்டிக் கவர்களை உடன் எடுத்துச்செல்வதால் அதில் கைகுட்டை, மொபைல் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
 • உடல் சூட்டைத் தக்கவைக்க, மூலிகை டீ, சுக்கு மல்லிக்காபி, புதினா டீ, இஞ்சி டீ ஆகியவற்றைக் குடிக்கலாம்.
 • குடிநீரை எப்போது இளஞ்சூடாகவே அருந்தவேண்டும்.
 • மதியஉணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, சுண்டைவற்றல், சீரகம், புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம்.
 • குழந்தைகளுக்குத் தரும் பாலில், சிறிதளவு மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்துகொடுக்கலாம்.
 • மிதமான சூடுள்ள நீரில் குளிக்கலாம். சில்தண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
 • மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்கு வருபவர்கள், கட்டாயம் கை, கால்களை கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழையவேண்டும்.
 • உணவு உண்பதற்கு முன்னர் சோப் அல்லது ஹாண்ட் வாஷ் போட்டு கைகழுவுவது அவசியம்.
 • ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தால் சட்னி, ஜூஸ் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். கொதிக்க வைக்கப்பட்ட சாம்பார், ரசம் போன்ற உணவுகள் சாப்பிடலாம்.
 • அதீத காற்றழுத்தம் காரணமாக எற்படும் காதுவலி உள்ளவர்கள், காதில் பஞ்சு, மப்ளர் அணிந்து கொள்ளலாம். ஜன்னலோரம், பால்கனி, மொட்டைமாடி உள்ளிட்ட இடங்களின் அருகே நிற்பதைத் தவிர்க்கவேண்டும்.
 • இன்று முழுவதும் நியூஸ் வெப்சைட், நியூஸ் சேனல், நியூஸ் அப்டேட்களைத் தொடர்ந்து கவனித்துவாருங்கள். இவை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பயன்படும். வதந்திகளை நம்பி அனாவசிய பயம் கொள்ளவேண்டாம்.
 • ஜீன்ஸ், பருத்தியால் தயாரித்த உடைகளை அணியாமல், மழையில் நனைந்தாலும் எளிதில் காயக்கூடிய சின்தடிக் துணிகளை அணியலாம்.
 • மழையில் நனைந்து அதிக குளிர் எடுத்தால், லிங்க முத்திரையை (Lingha mudra) ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யுங்கள். இதனைச் செய்வதால் அதிகக்குளிர், நடுக்கம், குளிர் காய்ச்சல், தலையில் நீர்கோத்தல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா ஆகியவை கட்டுப்படும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக்கூடாது.

 

இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோர்த்து, இடது கை கட்டைவிரலை உயர்த்தவேண்டும்.

 

ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோர்த்து, வலது கட்டை விரலை உயர்த்தவேண்டும்.

- ப்ரீத்தி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement