வெளியிடப்பட்ட நேரம்: 02:02 (24/12/2016)

கடைசி தொடர்பு:02:40 (24/12/2016)

பிரேசில் பெண்களிடம் அச்சத்தை விதைத்த ஜிகா!

தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாகப் பரவிய இந்த 'ஜிகா' வைரஸால், கருவில் வளரும் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த வைரஸ் காரணமாக பாதிப்படைந்த எண்ணற்ற குழந்தைகள் சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்தன.

உலகில் ஜிகா வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்று பிரேசில். அங்கே ஜிகா பாதிப்பு குறித்து பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், ஜிகா வைரஸ் அச்சம் காரணமாக தாங்கள் கருவுறுவதை தள்ளிப் போட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க