நிறங்களை குழந்தைகள் கண்டுபிடிப்பது எப்போது தெரியுமா? | Did You know When children discover the colors?

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (27/12/2016)

கடைசி தொடர்பு:18:26 (27/12/2016)

நிறங்களை குழந்தைகள் கண்டுபிடிப்பது எப்போது தெரியுமா?

குழந்தை

குழந்தை பிறந்தது முதல், அடுத்தடுத்த மாதத்துக்கான வளர்ச்சி அதனிடம் சீராக இருக்கிறதா என்பதைப் பெற்றோர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். அப்படி மூன்று வயதுக் குழந்தைகளிடம் எதிர்பார்க்கக் கூடிய மனரீதியான வளர்ச்சி மைல்கற்களை (Developmental Milestones) பட்டியலிட்டார், உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

* கைகளை மேலே உயர்த்தி பந்தை மேலே வீசுவார்கள்.
* மூன்று சக்கர வண்டியை ஓட்டுவார்கள்.
* தானே ஷு மாட்டிக்கொள்வார்கள்.
* கதவுகளைத் திறந்து மூடுவார்கள்.
* புத்தகத்தை வைத்து விளையாடும்போது, ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவார்கள்.
* ரைம்ஸ் சொல்லிக்கொடுத்தால் கற்றுக்கொண்டு பாடுவார்கள்.
* சின்னச் சின்ன வாக்கியங்களைப் பயன்படுத்திப் பேசுவார்கள்.
* குறைந்தபட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சரியாகச் சொல்வார்கள்''
என்ற சித்ரா அரவிந்த்,

''ஒருவேளை குழந்தைகளின் நடவடிக்கைகளில் இயல்புக்கு மாறான அல்லது தாமதமான வளர்ச்சி நிலைகள் தென்பட்டால், உடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்'' என்று வலியுறுத்தியவர்,  அப்படி பெற்றோர்கள் கவனம் கொடுக்க வேண்டிய குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

* அதன் வயதை ஒத்த பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், பேச ஆரம்பிப்பதில் மிகவும் பின்தங்குவது.
* உச்சரிப்புப் பிரச்னைகள்.
* மெதுவான சொல்திறன் வளர்ச்சி, தன் எண்ணத்தை வெளிப்படுத்தக்கூடிய சரியான வார்த்தையைக் கண்டடைய முடியாமல் போவது.
* ரைமிங் வார்த்தைகளைச் சொல்வதில் கடினம்.
* எண்கள், எழுத்துக்கள், நிறங்கள், வார நாட்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதை கடினமாக உணர்வது.
* சக குழந்தைகளுடன் பழகுவதில் பிரச்னை.
* பிறர் சொல்வதை (Direction) பின்பற்ற இயலாமை.
* பென்சிலை பிடித்து எழுதுவதில் சிக்கல்.
* ஷூ போடுவது, பொத்தான் போடுவது போன்றவற்றில் சிக்கல்.

இதுபோன்ற அறிகுறிகள் வளரும் குழந்தைகளிடத்தில் காணப்படலாம். எல்டி (LD - Learning Disability), ஏடிஎச்டி (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) மற்றும் ஆட்டிஸம் (Autism) போன்ற சில நரம்பியல் கோளாறுகளின் அறிகுறிகள், ஒரே மாதிரியாகத் தெரியலாம். சில குழந்தைகளுக்கு இவை சேர்ந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, தேர்ந்த உளவியல் நிபுணரைச் சந்தித்து, தகுந்த உளவியல் ஆய்வுக்குப் பின்பே குழந்தைக்கு என்ன பிரச்னை என்பதை சரியாகக் கண்டுபிடிக்க முடியும். பிரச்னையை சரியாகக் கண்டறிவதுதான், முறையான சிகிச்சைக்கு முதல் படி என்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் சித்ரா அரவிந்த்.

- என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்