நோயாளிகள் உடலில் இருந்து எடுக்கப்படும் புற்றுநோய் தடுப்பு மருந்து!

ஆரம்ப நிலை மார்பக புற்று நோய்க்கு எதிராக செயல்படும் Dendritic என்னும் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் Moffitt புற்றுநோய் மையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சோதனையின் போது இந்த தடுப்பு மருந்து, பாதுகாப்பான முறையில் ஆரம்ப நிலை மார்பக புற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பைத் தூண்டுவது தெரிய வந்துள்ளது.

Dendritic உயிரணுக்கள்  என்பது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு உயிரணு. ஆரம்பநிலை மார்பக புற்றுநோய் உள்ளவர்களின் உடலில் இருந்து dentric அணுக்கள் எடுக்கப்பட்டு, அதிலிருந்து தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கே அது செலுத்தப்படுகிறது. இந்த முறையை ஆரம்ப நிலை மார்பக புற்றுநோய் உள்ள 54 பெண்களிடத்தில் சோதனை செய்துள்ளனர்.  பரிசோதனை முடிவில், பாதிக்கப்பட்ட பெண்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மார்பக புற்றுநோய் செல்களில் உள்ள HER2 protein அழிக்கப்பட்டதாம். இதனால் புற்றுநோய் பரவாமல் அதன் தீவிரம் குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!