Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு அன்னாசிப் பழம் எழுபதாயிரம் ரூபாயாம்..! இன்னும் இருக்கு ஆச்சரியம்

பழம்

மனிதனுக்கு சலிக்கவே சலிக்காத ஒரு விஷயம் சாப்பாடு. அதில்தான் எத்தனை எத்தனை வகைகள், எத்தனை டயட்கள். இன்றைய தேதிக்கு பழத்தை மட்டும் சாப்பிட்டு வாழ்கிற பழக்கம் பரவலா வளர்ந்துக்கிட்டு இருக்குன்னு ஆன்லைன்ல செய்திகள் பரவுது. சரி பழங்கள் சாப்பிடுறவங்க இதயும் நோட் பண்ணிக்குங்கப்பா. உலகின் காஸ்ட்லியான பழங்கள் பட்டியல் இதோ..  

8. புத்தர் பேரிக்கா :

புத்தர் பேரிக்கா பழங்கள் (Buddha pear)

இந்த ரக பழம் போதி தர்மர் சமாதியான சீனாவில் கிடைக்கிறது. சிங் மங் ஹல்-ங்குற (கொஞ்சம் படிக்க கஸ்டமாத்தான் இருக்கு) விவசாயி தான் புத்தர் பேரிக்காய சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாரு. மொத்த சீனாவுக்கு இவர் தான் சப்ளையராம். புத்தர் வடிவில் இருக்கும் பேரிக்காய (pear) சாப்டா  நீண்ட நாளுக்கு வாழலாமுன்னு யாரோ கொளுத்திப் போட்டுட்டாங்க. எல்லாருக்கும் அல்வா கொடுக்குற சீனா காரனுக்கு புத்தர் பேர சொல்லி, எவனோ புஸ்வானம் கொளுத்தி இருக்கான். எது எப்புடியோ இன்னக்கி ஒரு பழம் 260 ரூவான்னு வாங்கி சாப்டுக்கிட்டு தான் இருக்காங்க ஜிங் மங் சங் சைனீஸ்கள்.

7. செம்பிகியா க்வின் ஸ்ட்ராபெர்ரி :

செம்பிகியா க்வின் ஸ்ட்ராபெர்ரி, Sembikiya queen strawberry

சொம்புல தண்ணி குடுக்கணுமா-ங்குற மாதிரியே பேர் இருக்கு. இந்த ஸ்ட்ராபெர்ரி பழம்தாங்க, உலகின் அழகான மற்றும் சுவையான ஸ்ட்ராபெர்ரிகள். குறிப்பாக இதோட தோற்றப் பொலிவு மற்றும் வடிவத்துக்குத்தான் காசை இறைக்கிறோம். இதுல ஒரு ஸ்ட்ராபெர்ரிய டேஸ்ட் பண்ணனும்னா கூட 485 ரூவா கொடுக்கணும். இதயும் நம்ம ஜப்பான் தோழர்கள் தான் கண்டுபிடிச்சிருக்காங்க மக்களே.

6. டெகொபான் சிட்ரஸ் :

டெகொபான் சிட்ரஸ் பழங்கள், Dekopon citrus

ஆரஞ்சு பழத்துக்கு தாங்க இந்த பேரு. இதோடு சிறப்பு என்னன்னு கேக்கறீங்களா...? உலகின் இனிமையான ஆரஞ்சுப் பழங்கள் இதுதான். இதுல கொட்டை கிடையாது. கியோமி மற்றும் பொன்கன் என்கிற இரண்டு ஆரஞ்சு ரகங்களின் கலப்பு உருவம் இந்த டெகொபான் சிட்ரஸ். இதயும் இந்த ஜப்பான்காரங்க தான் கண்டு பிடிச்சிருக்காங்க. இதுல ஒரு ஒத்த ஆரஞ்ச வாங்கணும்னா 800 ரூவா செலவாகும்.

இதுல 6 + 5 = 11 சொலையாச்சும் இருக்குமா?

5. ரூபி ரோமன் திராட்சை :

ரூபி ரோமன் திராடை பழங்கள், Ruby roman Grapes

இசிகோவா-ங்குற ஒரு ஜப்பான் கம்பெனி இந்த ரக திராட்சைய சாகுபடி செய்யுது. 2008-ல இருந்துதான் இந்த திராட்சை உற்பத்தி செய்யப்பட்டு வருது.  ஒரு கொத்துல சராசரியா 25 பழங்கள் இருக்கும். இந்த திராட்சையோட சைஸ்தான் கொஞ்சம் பெரிசு. டேபிள் டென்னிஸ் பால் சைஸ்ல இருக்கும். 25 பழங்கள் கொண்ட இந்த திராட்சை கொத்து, இந்தியாவுல அமேஸான்ல 810 ரூவாய்க்கு கிடைக்குது.

"மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்... "

4. சிகாய் ஈச்சி ஆப்பிள் :

சிகாய் ஈச்சி ஆப்பிள் பழங்கள், sekai ichi apple

இந்த சிகாய் ஈச்சிக்கு அர்த்தம் உலகின் நம்பர் 1. இந்த ஆப்பிளோடு ஸ்பெஷாலிட்டியே, ஒரே ஆப்பிள் சுமாராக 12 - 18 இன்ச் விட்டத்துடன், 750 கிராம் - 1 கிலோ எடை இருக்கும். 2014-ல் தான் இதோடு 40-வது பிறந்த நாள் கொண்டாடுனாங்க.  இந்த ரக ஆப்பிள்ல  முதன்முதல்ல ஜப்பான்லதான் பயிர் செய்யப்பட்டது. ரெட் டெலிசியஸ் மற்றும் கோல்டன் டெலீசியஸ் ஆகிய இரண்டு ரக ஆப்பிள்களின் ஹைபிரிட் வெர்சன் தான் இந்த சிகாய் ஈச்சி. இதுல ஒரு ஆப்பிள வாங்கணும்னா 1,365 ரூவா செலவாகும். பரவாயில்லயா? இந்த காசுல நம்ம ஊர்ல 6 - 8 கிலோ ஆப்பிள் வாங்கலாம்ல.

3. கட்ட தர்பூசணி :

கட்ட தர்பூசனி பழங்கள், Square watermelon

கட்டதுரைன்னே கண்டுபிடிச்சிருப்பாங்க போல. என்ன ஆச்சர்யம்னா இந்த தர்பூசணியே கனசதுரமாத் தான் இருக்கும். இந்த பழம் சராசரியாக 6 கிலோ எடை இருக்கும். கடந்த 2014-ல் இருந்து தான் இத ஜப்பான்காரங்க ஏற்றுமதி பண்ணவே ஆரம்பிச்சிருக்காங்க. இந்த கட்ட தர்பூசணிய வாங்கி பல பேர் சப்பிடுறது இல்ல. மாறா வீட்டு டெகரேஷனுக்கு வெச்சிடுறாய்ங்க. ஒரு முழு தர்பூசணியோட விலை 5000 ரூவாப்பு.

"நம்ம பாடியவே ஷேப்பா வெச்சுக்குறது இல்ல, இதுல வாட்டர்மிலன ஷேப்பாக்கி இருக்காங்க.. சில்லி கய்ஸ் "

2. டயோ நோ டமாகோ மாம்பழம் :

டயோ நோ டமாகோ மாம்பழங்கள், Tayo No Tamago Mangoes

 “முட்டை சூரியனில் இருப்பது"-ங்குறது தான் அர்த்தமாம் இந்தப் பெயருக்கு! என்ன பெயர் இது உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதா..?  டயோ கொயா, சுயோன்னு  பெயரை பாத்த உடனே புரிஞ்சிருக்குமே... இதையும் நம்ம ஜப்பான்காரனுகளோடதுன்னு. சராசரியா இந்த மாம்பழம் 350 கிராம் எடை இருக்கும். இதோட ஸ்பெஷாலிட்டி வழக்கமா மாம்பழத்துல இருக்குற சர்க்கரை அளவோட குறைவான சர்க்கரை தான் இந்த ரக மாம்பழங்கள்ல இருக்கும். சராசரியா, ஒரு கிலோ மாம்பழம் 6,500 ரூவா தான். 

1. பைன்ஆப்பிள்ஸ் ஃப்ரம் தி லாஸ்ட் கார்டன் ஆஃப் ஹெலிகன் :

அண்ணாசி பழங்கள், pineapples from the lost gardens of heligan

ஐரோப்பிய கண்டத்துலேயே அன்னாசி விளையுற ஒரே இடம், இங்கிலாந்துல இருக்குற "தி லாஸ்ட் கார்டன் ஆஃப் ஹெலிகன்" -ங்குற தோட்டத்துல தான். பொதுவா குளிர் பிரதேசங்கள்ல அன்னாசிப் பழங்கள் விளையாது. இதுக்காகவே பிரத்யேகமா சில ஏற்பாடுகளை செய்து, குதிரைகளின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி இந்த ரக அன்னாசிப் பழங்கள விளைய வைக்கறாங்க. தோராயமாக இதில் ஒரு பழத்தின் சராசரி விலை 70,000 ரூவா. இதுல சோகமான விஷயம் என்னான்னா, இந்த பழம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் டேஸ்ட் எல்லாம் கிடையாது. இந்த பழத்தோட உற்பத்தி செலவு ரொம்ப ஜாஸ்தி, அதோட ஐரோப்பியாவுல கிடைக்காதுங்குற காரணத்தால தான் இவ்வளவு விலை.  பலம் தரும் பழங்கள்  நம்ம ஊர்லயே  கிடைக்கத் தான் செய்யுது.

"நாம அன்னாசி 2 ஸ்லைஸ் 10 ரூவாயக்கு தள்ளுவண்டி அக்காகிட்ட வாங்கிக்கலாம் பாஸ்."

மு.சா.கெளதமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement