Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 வயதுக்குள்ளான குழந்தைக்கு காலையில் தர வேண்டிய, தரக்கூடாத உணவுகள்! #ChildCare

குழந்தை - காலை உணவு சாப்பிடிம் பெண் குழந்தைகள்

குழந்தை வளர்ப்பு என்பது எளிதாக இருந்தது அன்று. ஆனால், கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் செல்லும் இன்று அவை சிரமமான ஒன்றாக மாறியிருக்கிறது. அதுவும் பெரியவர்கள் துணையில்லாமல், 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு என்ன கொடுக்கலாம், என்ன கொடுக்கக் கூடாது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு ஆலோசனைகள் தருகிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.

''ஒவ்வொரு நாள் காலை வேளையும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு அத்தனை சத்துமிக்கதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும். பொதுவாக காலை வேளைகளில் வேகவைத்த உணவுகள் (steamed food) மிகச் சிறந்தது. இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என தினமும் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். பொங்கல், கிச்சடி போன்றனவும் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்றே. இத்துடன் அவசியம் காய்கறிகள் கொண்ட சாம்பார், புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். இந்த உணவு வகைகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் இருப்பதால் ஈசியாக ஜீரணித்து, பசியைத் தூண்டக்கூடியது.

குழந்தைகள் இட்லி, தோசை சாப்பிட மறுக்கிறார்கள் என்றால் வீட்டில் தயாரித்த பிரெட் வெண்ணெய் தடவி கொடுக்கலாம். அல்லது பழங்களான பப்பாளி, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் போன்றவற்றை துண்டுகளாக்கி கொடுக்கலாம். இவையெல்லாம் காலை நேரத்துக்கு ஏற்ற உணவுகள். முட்டை விரும்பும் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை, சத்து மாவு கஞ்சி போன்றவைகள் கொடுக்கலாம்.

கிடைக்கக் கூடிய சத்துக்கள்:
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளில் அரிசி, பருப்பு வகைகள், நெய், எண்ணெய், காய்கறிகள் இருப்பதால் இதன் மூலம் வைட்டமின், புரோட்டீன், மினரல்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், ஃபைபர், நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புக்கள் என பரிபூரண ஊட்டச்சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கும்.  இதைத்தான் பேலன்ஸ்டு டயட் என்போம். ஈஸியாக செரிமானம் ஆகக் கூடியது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

காலையில் தரக்கூடாதவை:

மேல் குறிப்பிட்டுள்ல உணவுகள் என் குழந்தை சாப்பிட மறுக்கிறார்கள் என்பதற்காக காலையில் வெறும் பிரெட், கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், கஞ்சி போன்றவற்றை கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்துக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.

காலையில் குழந்தைகள் டீ, காபி விரும்பி குடிக்கிறார்களே என்று தினமும் அவர்களுக்கு குடிக்கக் தரக்கூடாது. இவையெல்லாம் பசியை குறைப்பதோடு இதில் இருக்கும் அமிலத்தன்மையால் அல்சர் ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதேபோல ஊட்டச்சத்து பானங்கள் கொடுப்பதைவிட பால், மோர், சத்து மாவு கஞ்சியே போதுமானது.

-என்.மல்லிகார்ஜுனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement