அதிகரிக்கும் மனஅழுத்தம்! ஒரு அலர்ட் ரிபோர்ட் | Increasing mental depression! An alert report

வெளியிடப்பட்ட நேரம்: 06:58 (30/01/2017)

கடைசி தொடர்பு:10:09 (30/01/2017)

அதிகரிக்கும் மனஅழுத்தம்! ஒரு அலர்ட் ரிபோர்ட்

இன்று நம்மில் பலரை ஆட்கொண்டு சிரமப்படுத்துவது மன அழுத்தம். வேலைப்பளு, குடும்பப் பிரச்னை, வங்கிக் கடன், எதிர்கால சிந்தனைகள் என பல காரணங்களால் மனஅழுத்தம் உண்டாகிறது. தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளிப்படையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தாங்கள் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்ட அனுபவம் குறித்து பேசத் தொடங்கியதும், இந்தப் பிரச்னை வெளியுலகத்துக்குத் தெரியத் தொடங்கியது.


வருடா வருடம் ஏப்ரல் 7-ம் தேதி 'உலக ஆரோக்கிய தினமாக உலக சுகாதார அமைப்பால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், உலக ஆரோக்கிய தினத்தில், பெரும்பாலான உலக மக்கள் சந்திக்கும் எதாவதொரு பிரச்னையைப் பற்றி சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படும். இந்த வருடம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உண்டான வழிகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. 'இந்தியாவில், 20 நபர்களில் ஒருவர் மன அழுத்ததால் பாதிப்புக்கு உள்ளாகிறார்' என்கிறது, பெங்ளூரில் 'நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்சஸ்' அமைப்பால் (National Institute of Mental Health and Neurosciences) நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. இந்தியாவில் 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 2016-ம் ஆண்டு 14 சதவிகிதம் பேர் அதிகமாக மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நம் நாட்டில் சர்க்கரை, இதய நோய்கள் போன்ற பெரிய நோய்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மருத்துவ உலகம் மன அழுத்தத்துக்குக் கொடுப்பதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இப்போது பலர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசத்தொடங்கிய பின்னர், கூச்சப்படாமல், மனநல நிபுணர்களை நாடச் செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் மனஅழுத்தம் அதிகமானதால் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close