ஒரு குழந்தை விளையாடினா என்னலாம் நல்லது நடக்கும் தெரியுமா? | Do you know what are the benefits of children playing?

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (30/01/2017)

கடைசி தொடர்பு:11:31 (30/01/2017)

ஒரு குழந்தை விளையாடினா என்னலாம் நல்லது நடக்கும் தெரியுமா?

விளையாடும் குழந்தைகள்

ன்றைய பெற்றோர்களின் முக்கிய நோக்கமே, தன் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். 'ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியார்தான் 'உடலினை உறுதி செய்' என்றார். இன்றைய மாணவர்களுக்கு ஓடி விளையாடுவதற்கான நேரமோ, களமோ இல்லை என்பதுதான் பெற்றவர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிற காரணங்களாக இருக்கின்றன. ஆனால்  உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த், விளையாட்டுக்களினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விவரிக்கிறார்.

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்:

*ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்.

*விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும்.

* விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்.

* உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது.

* சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும்.

* விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும்.

* மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படி ஒரு பிரச்னையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரபலிக்கும்.

செல்போன், வீடியோ கேம்ஸில் மூழ்கும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள்...

* சுறுசுறுப்பு இல்லாமல் போதல், சிந்திக்கும் திறனை இழத்தல். ஒரே நேர்க்கோட்டில் பயணித்தல் ஆகியன ஏற்படும்.

* ஒரே திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் நாளடைவில் கண் பார்வை பாதிப்புக்குள்ளாதல், கண்ணில் நீர் வற்றிப் போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

* சக நண்பர்களிடம் எப்படி பழகுவது, பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற மரியாதை பண்புகள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும்.

* படிப்பில் கவனக்குறைவு, வீடியோ கேம்ஸில் உள்ள வன்முறை மனதில் பதிவது, மன அழுத்தம் போன்ற ஏற்படுதல்.


பெற்றோர் கவனத்துக்கு:

*ஒரு நாளில் அரை மணிநேரத்துக்கு மேல் வீடியோ கேம்ஸ், டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காதீர்கள்.

*தினமும் அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது மற்றவர்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள். அப்படி முடியவில்லை என்றால், விளையாட்டு (கிரிக்கெட், ஃபுட்பால், ஷட்டில்காக், டென்னிஸ்) வகுப்புகளில் போட்டிக்காக இல்லாமல் மனதை சமன்படுத்த, உடல் வளர்ச்சியடைய போன்ற காரணங்களுக்காக சேர்த்து விடுங்கள்.

*புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரியுங்கள்.

-என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்