வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (02/02/2017)

கடைசி தொடர்பு:15:08 (02/02/2017)

கத்தியின்றி ரத்தமின்றி சிகிச்சையொன்று இருக்குது! (sponsored content)

எந்த ஒரு உடல் உபாதைகளுக்கும் கத்தியின்றி ரத்தமின்றி, தீர்வு தருகிறது அக்குபங்சர் மருத்துவம். “நோய் நாடி நோய் முதல் நாடி” எனும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க நோயின் மூலத்தைக் கண்டறிந்து பல்வேறு விதமான நோய்களையும் வரும்முன் காக்கவும் முடியும், குணப்படுத்தவும் முடியும். இது ஒரு மருந்தில்லா மருத்துவம். இந்த சிகிச்சையைப் பற்றிக் கடந்த இருபத்தியேழு வருடங்களாக அக்குபங்சர் மருத்துவத் துறையில் சிகிச்சை அளித்துவரும் ஹை-க்யூர் அக்குபஞ்சர் மருத்துவமனையின் டாக்டர் சங்கர் கூறுகையில்..

அக்குபங்சர் / அக்குபிரஷர் சிகிச்சை பற்றி..

 

 

இந்த அக்கு பஞ்சர் சிகிச்சை என்பது வெளிநாட்டிலிருந்து இம்போர்ட் ஆகி வந்த விஷயம் கிடையாது. பாரம்பரியமாக நம் நாட்டில் இருந்த விஷயம்தான். 

சித்தர்கள் மூலம் துவங்கியது, பின்னர் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவியது. இப்போது இந்தியாவில் கடந்த 10-15  வருடங்களாக பரவி வருகிறது. 

ரிக் வேதத்தில் கூட இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. அது என்னவென்றால், உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளின் சக்தியும் உள்ளங்கையில் முடிகிறது. உள்ளங்கையில் உள்ள சில புள்ளிகளைத் தூண்டிவிட்டு எந்த நோயையும் குணப்படுத்தலாம். அதுதான் அக்கு பிரஷர்

இந்து கோவில்களுக்குச் சென்றால் எந்த சிலையும் கையைக் கட்டிக் கொண்டிருக்காது, ஒவ்வொரு சிலையும் ஒரு முத்திரையைக் கொண்டிருக்கும்.  அந்த முத்திரைகளை பின்பற்றினால் பல்வேறு விதமான நோய்களையும் குணப்படுத்தலாம்.

இந்த சிகிச்சையில் நோயைக் கண்டறிவது (Diagnosis) எவ்வாறு?

உள்ளங்கைகளில் உள்ள புள்ளிகளை தொட்டுப் பார்த்தே (Diagnosis) உடலில் உள்ள பிரச்சனைகளை உணரலாம். உள்ளங்கைகளில் பஞ்ச பூதங்கள் இருக்கிறது. ஒவ்வொரு விரலிலும் அது பிரதிபலிக்கிறது. அதே போல உடலில் 14 விதமான சக்தி நாளங்கள் இருக்கிறது. அது அதிகமானாலோ, குறைந்தாலோ வரும் நோய்களை நாம் அக்குபங்சர் அல்லது அக்கு பிரஷர் மூலம் குணமாக்கலாம். 

இந்த சிகிச்சை பற்றி இன்னும் சிறிது விளக்கமாகக் கூற முடியுமா? 

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாய் இயங்குகிறது. 

உடலில் ஓர் உறுப்பு செயல் இழந்துவிட்டால், ஆங்கில மருத்துவத்தில் அதற்கு சிகிச்சை இல்லை. அந்த உறுப்பு நீக்கப்படும் அல்லது செயல்படாமலேயே உடலில் இருக்கும். அந்த உறுப்பை நீக்குவதால்,  அதைச் சார்ந்த மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. இந்த அக்குபங்சர் மருத்துவத்தின் மூலம் கத்தியின்றி அந்த பழுதான உறுப்பை மற்ற உறுப்புகளின் ஆதரவுடன் செயல்பட வைக்கலாம். 

மெல்லிய நூலிழை போன்ற ஊசி. அதை உடலில் வைப்பதே தெரியாது. ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தும் ஊசியைவிட பத்து மடங்கு சிறியது. 
இரு வேறு உலோகங்கள் சேர்ந்த ஊசி அது. அதை ஒரு புள்ளியில் வைத்து தூண்டும்போது, பிரபஞ்ச சக்தி அந்த ஊசியின் வழியாக பாதிப்படைந்த உறுப்புக்குச் செல்கிறது. ஒரு ஆன்டென்னா போல. அப்போது தடை செய்யப்பட்ட சக்திகள் அந்த பழுதடைந்த பகுதிகளில் தூண்டப்படுகிறது. அதிகமாக உள்ள சக்தி வெளியேற்றப்படுகிறது. குறைவாக உள்ள சக்தி அதிகமாகிறது. இவ்வாறு வெளியிலிருந்து மூலக்கூறுகளை உள்ளே செலுத்தாமல் உள்ளே இருக்கும் மூலக்கூறுகளைத் தூண்டுவதால் பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் எல்லாவித நோய்களும் குணமாகிறது. 

நெற்றியில் பொட்டு வைப்பது அக்குபிரஷர் புள்ளியைத் தூண்டுவதற்காக என்று சொல்வது உண்மையா?

ஆம். அது மட்டுமல்ல நாம் காலம் காலமாக செய்து வரும் பல விஷயங்களுக்கும் காரணங்கள் உண்டு. அலகு குத்துவது, நகைகள் அணிவது, சங்ககாலத்தில் ஆண்களும் பெண்களும் தலை முதல் கால் வரை நகைகள் அணிந்திருந்தனர்.    எளிதாக வீட்டில் செய்யக்கூடிய அக்குபிரஷர் ட்ரீட்மென்ட்:

கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே ஒரு ஐஸ்கட்டியை வைத்தால் தலைவலி, பல்வலி, எந்த விதமான உடல்வலியையும் கட்டுப்படுத்தும். 

எந்த விதமான வயதினர் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்? 

வயிற்றில் இருக்கும் குழந்தையிலிருந்து எல்லோருக்குமே இந்த சிகிச்சை செய்யலாம். பெண்ணுக்கு வலி இல்லாத பிரசவம், கருவில் இருக்கும் குழந்தைக்கு இருக்கும் மரபுவழிப் பிரச்சனைகள்/ ஊனங்கள் எல்லாவற்றையும் குணப்படுத்த முடியும். குழந்தையின்மையை போக்க உதவுகிறது. எந்த ஒரு நோயையும் எதிர்க்கும் சக்தி உடலுக்கு இருக்கிறது. அதைத் தூண்டும் சக்திதான் இந்த சிகிச்சை. 

நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளுக்கும் இந்த அக்குபங்சர் சிகிச்சையில் மருத்துவம் உண்டா? 

ஆஸ்துமா, சர்க்கரை வியாதி எல்லாம் வியாதியே அல்ல. அது வெறும் அறிகுறி மட்டுமே. ரத்த அழுத்தமும் ஒரு அறிகுறிதான். 

எல்லா விதமான வியாதிகளையும் இந்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியுமா?

எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளைத் தவிர பெரும்பாலான உடல் நோய்களும் அக்குபங்சர் மூலம் குணப்படுத்தலாம். நோயின் ஆரம்ப நிலையிலேயே ஒருவர் வந்துவிட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.  ஆங்கில மருத்துவத்தில் செய்வது போல் இறந்த செல்களை உடலிலிருந்து அகற்றுவதில்லை. அக்குபங்சர் மூலம் இறந்த செல்களைப் புதுப்பிக்க முடியும்.
அதனால்தான் இதனை சக்தி மருத்துவம் என்றும் அழைக்கின்றனர்.  

-தொடரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்