அமர்ந்த இடத்திலேயே அசத்தல் வார்ம்அப்..! #PhotoStory

ஐந்து நிமிடங்களில்.... வார்ம்அப்.....


ஆபிஸில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கிறோம். அதனால், தசைகள் பாதிக்கப்படலாம். எனவே உடலுக்கு ரிலாக்சேஷன் தர 'வார்ம்அப்' பயிற்சி அவசியம். கண்களை மூடிக்கொண்டு நிமிர்ந்து உட்காரவும்.

வார்ம்அப்


பலன்கள்: ஆக்சிஜன் சீராக கிடைக்கும். பயிற்சிக்கு உடல்நிலை தயாராக வார்ம்அப் உதவும்.


கழுத்துக்கான வார்ம் அப்....

முதுகுத்தண்டு நிமிர்ந்து கால்களை தரையில் பதியும்படி நாற்காலியில் உட்கார வேண்டும். தொடை மேல் கைகளை வைக்க வேண்டும்.


கழுத்துக்கான வார்ம் அப்

கண்களை திறந்து ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மூச்சு விட்டப்படியே இடதுபுறமாக கழுத்தைத் திருப்பவும். மூச்சை உள்ளே இழுத்தப்படி பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும். பழைய நிலைக்கு வரும்போது மூச்சை வெளியே விட வேண்டும்.
மேற்சொன்ன முறையிலே, வலது பக்கம், மேல், கீழ் எனக்  கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும்.


ஸ்டெப் 1

ஸ்டெப் 1


ஸ்டெப் 2

ஸ்டெப் 2

ஸ்டெப் 3

ஸ்டெப் 3


ஸ்டெப் 4

ஸ்டெப் 4


பலன்கள்: மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் சீராகச் செல்லும். மேலும், ரத்த ஓட்டமும் சீராகும்.
கழுத்து வலியால் அவதிப்படுவோருக்கு, சிறந்த பயிற்சி இது. விரைவில், கழுத்து வலி குறையும்.
கழுத்துப்பகுதியில் உள்ள இறுக்கங்கள் தளரும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!