`லவ் ஆப்பிள்’ முதல் டார்க் சாக்லேட் வரை... காதலைத் தூண்டும் உணவுகள்! #PhotoStory #ValentineDay

காதல் தவிர்க்க முடியாதது. இயற்கையும்கூட. பசி, தாகம்போல காதலும் நமக்கான உணர்வுதான். நமக்கான உரிமை அது. அனைத்து உயிர்களின் இலக்கும் ஏதோ ஒரு வழியில் காதலைச் சுற்றியே நகர்ந்துகொண்டிருக்கும். அன்பின் பிணைப்பில் ஆசைதீரக் காதலிக்கத் தூய மனதும், சக்தி தரக்கூடிய ஆரோக்கியமான உணவும் முக்கியம். காதலைத் தூண்டும் காதல் உணவுகள் பற்றிப் பார்ப்போமா...

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பைட்டோஈஸ்ட்ரொஜென் (Phytoestrogens), பாலிபீனால்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை பாலியல் உறவின்போது, உடலுக்கு அதிக சக்தியைத் தரக்கூடியவை. இது, பெண்களுக்கு மிகவும் நல்லது. 

ஆப்பிள் - காதல் உணவுகள்

தக்காளி

இதில், பாலுணர்வைத் தூண்டக்கூடிய சத்துக்கள் உள்ளதால், `லவ் ஆப்பிள்’ என்று பெயர் பெற்றது. தோற்றத்திலும் கவர்ச்சிகரமான உணவு இது.

தக்காளி

கிவி

ஃபோலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைக்குத் திட்டமிடும் பெண்கள் அவசியம் சாப்பிடவேண்டிய பழம் இது. உடலுக்குச் சக்தி கொடுக்கும். குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும்.

கிவி

லெட்யூஸ்

மல்டி வைட்டமின்கள் நிறைந்திருக்கும் கீரை. இதன் சாறு, நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடியவை. பதற்றம், பயம், கவலை ஆகியவை நீங்கி நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

லெட்யூஸ்

பட்டாணி

'மூட் ஸ்விங்ஸ்' என்று சொல்லக்கூடிய மன ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளுக்கு மனச்சோர்வுக்கான அறிகுறிகளைப் (Symptoms) போக்கும் தன்மை உண்டு.

பட்டாணி

டார்க் சாக்லேட்

செரோட்டொனின் என்ற ஹார்மோனைத் தூண்டக்கூடியவற்றில் டார்க் சாக்லேட்டுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தைத் தந்து, ரத்த நாளங்களுக்கு ஓய்வைக் கொடுக்கும். இதனால், பாலியல் உணர்வைச் சீராக அனுபவிக்க உதவும்.

டார்க் சாக்லேட்

காபி

காபியில் உள்ள கஃபைன், தற்காலிக எனர்ஜியைத் தரக்கூடியது என்பதால் ஆண், பெண் இருவருமே பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத காபியை அருந்தலாம். காதல் உறவுக்கு எனர்ஜி தரும் அற்புத பானம் இது.

காபி

மாதுளை

மாதுளையைப் பழமாகவோ பழச் சாறாகவோ தொடர்ந்து அருந்திவர, ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தொடர்பான பிரச்னை வராமல் தடுக்கலாம்.

மாதுளை

தர்பூசணி

இந்தப் பழத்தை, `நேச்சுரல் வயாகரா’ எனச் சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் (Amino acid citrulline) எனும் சத்து,  வயாகராவுக்கு இணையான பலன்களைத் தரவல்லது.

தர்பூசணி

- ப்ரீத்தி

- படம்: வி.ஶ்ரீநிவாசுலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!