பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்!

swine flu herbal

பருவம் மாறுகிறது... திடீரென மழை, பனி என மாறிமாறி சீசன் ஆரம்பிக்கிறது... மழைக்காலத்தில் வரும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க 'கபசுரக் குடிநீர்' என்ற கஷாயம் வழங்கப்படுகிறது. இந்த கபசுரக் குடிநீர் ஆடு தொடா, கற்பூரவல்லி, அக்கிரகாரம் போன்ற 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும், பன்றிக்காய்ச்சல் நோயின் முக்கிய அறிகுறியான தொண்டைக்கட்டு, சித்த மருத்துவ நூல் குறிப்புகளின்படி கபசுரம் என்ற காய்ச்சலின் அறிகுறிகளோடு ஒத்துப்போகிறது என்கிறார் தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த சித்த மருத்துவர் சிராஜ்தீன்...

தினமும் 30-60 மி.லிட்டர் அளவு இரண்டு அல்லது மூன்று வேளை மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்தலாம். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் கோழைக்கட்டியைச் சரிசெய்யும். குறிப்பு: இந்த கபசுரக் குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். நாட்டுமருந்து கடைகளில் பொடியாக கிடைக்கிறது.

- வீ.சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!