நலம் வாழ... 11 பாசிட்டிவ் பழக்கங்கள்..! #PositiveHabits | 11 Positive Habits for Good Life

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (26/02/2017)

கடைசி தொடர்பு:12:01 (27/02/2017)

நலம் வாழ... 11 பாசிட்டிவ் பழக்கங்கள்..! #PositiveHabits

`இந்த வாழ்க்கை சரியானதாக இல்லை... என்னடா வாழ்க்கை இது...’ என்றெல்லாம் புலம்பித் தவிப்பவரா நீங்கள்..? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. இதில் சொன்னபடி உங்கள் அன்றாடப் பழக்கங்களை மாற்றிப் பாருங்களேன்... அந்த மாற்றங்கள் இனிதான வழியை அமைத்துக் கொடுக்கும்; வாழ்வில் பெரும் மாற்றங்களைச் சந்திப்பீர்கள்; அவை, உங்களுக்குப் பிடித்தமானவையாக மாறும்; பாசிடிவ்வான நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்!

 

சரியான நேரத்துக்கு தூக்கம்

7-8 மணி நேரம் தூங்குங்கள். இதை ஒவ்வொரு நாளும் பின்பற்றினால், அற்புதமான பலன்களைப் பெறலாம். உங்களின் கவனக் குவிப்பும், சிந்திக்கும் திறனும் மேம்படும்.

படுக்கையை பிரமாதமாக்குங்கள்!

தினமும் இரண்டு நிமிடங்களாவது செலவழித்து, தூங்கி எழுந்த படுக்கையைச் சரிசெய்து, அழகாக மாற்றுங்கள். முடிந்தால் லாவண்டர் எண்ணெய் போன்ற மிதமான நறுமணம் கொண்டவற்றை படுக்கை அறையில் தெளிக்கலாம். 

சரியான பிரேக்ஃபாஸ்ட்

இரவு இருந்த விரதத்தை உடைப்பது, பிரேக்ஃபாஸ்ட்தான். அதை, காலை 9 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இதனால், அதிகமாக உண்ணும் பழக்கமும் (Over eating) தவிர்க்கப்படும். பிரேக்ஃபாஸ்ட் தயாரிப்பை எளிமையாக்க, முதல்நாளே என்ன செய்வது எனத் திட்டமிடலாம்.

சரியான பிரேக்ஃபாஸ்ட்

மார்னிங் பிளான் முக்கியம்!

இன்று என்ன செய்யப் போகிறோம் என்பதை எழுதிவையுங்கள். இது மனஅழுத்தத்தையும் அவசரச் செயல்களையும் தடுக்கும். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்னர், தெளிவு கிடைக்கும்.

உடல் மகிழ இதைக் குடிக்கலாம்!

சர்க்கரை சேர்த்த பானங்களைக் குடிப்பது, உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல; உடல் உற்சாகமும் பெறாது. போதுமான அளவு தண்ணீர், இளநீர், சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகளை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்; ஆரோக்கியம் மேம்படும்.

நான்தான் செஃப்!

வீட்டு உணவுகளுக்கு சில சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது, கலொரிகள், கொழுப்பு, சர்க்கரை ஆகியவை குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்துக்கான அடிப்படை ஃபார்முலா இது. இவற்றை நாமே செய்து சாப்பிடுவது சிறந்தது.

நன்றி சொல்லப் பழகுங்கள்!

எந்த விஷயமாக இருந்தாலும் எவ்வளவு நன்றி சொல்கிறோமோ நல்லது. அது ஓர் ஈர்ப்புவிதி. அதில் ஈர்க்கப்பட்டு நிறைய நன்றிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் அளவுக்கு அது நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கும். உணர்வுரீதியாக மற்றவர்களுடன் உங்களால் இணைய முடியும். உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களே இருப்பதுபோல சூழல் அமையும்.

எழுதப் பழகுங்கள்

எழுதப் பழகுங்கள்!

ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பற்றி உங்களுக்கு நீங்களே டிப்ஸ் எழுதிப் பழகுங்கள். ஆங்கர் மேனேஜ்மென்ட், ஆங்க்ஸைட்டி தவிர்க்க என எழுதிக்கொண்டே போகலாம். இதனால், உங்களுக்கான விடை உங்களிடமே கிடைக்கும். தனியாக கவுன்சலிங் தேவைப்படாது.

தினம்... தினம்... தியானம்!

தினமும் தியானம் செய்வது மூளைக்கு நல்லது. ஆரோக்கியமான நடத்தைக்கு அது உங்களை மாற்றும். ரத்த அழுத்தத்தைச் சமன் செய்யும். கோபம், கவலை, மனச்சோர்வு ஆகியவற்றை விரட்டும்.

யோகா

உடலையும் மனதையும் ஆரோக்கியப்படுத்தும் டாக்டர் இது. மனதை ஒருநிலைப்படுத்தும். அதேசமயம், உடலையும் வலுவாக்கும்.

யோகா

ஆழ்ந்த மூச்சு... எப்போதும்

ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். இதன் பெயர் 'டீப் பிரீத்திங் டெக்னிக்’. இதற்கு, கால் மணி நேரம் செலவிட்டால் போதும். இதற்காக நீங்கள் தனியான இடத்தையெல்லாம் தேட வேண்டாம். டெஸ்க் வேலை, சமைக்கும் நேரம், படிக்கும் நேரம் போன்ற எந்தச் சமயங்களிலும் இதை நீங்கள் பழக்கமாகச் செய்துவரலாம்.

நல்லதே நடக்கட்டும்..!

- ப்ரீத்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்