தொல்லை கொடுக்கும் மூட்டு வலியும் ஆயுர்வேத நிவாரணமும்! (sponsored content) | Say goodbye to joint pains through Orthocure therapy kit

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (01/03/2017)

கடைசி தொடர்பு:18:24 (07/03/2017)

தொல்லை கொடுக்கும் மூட்டு வலியும் ஆயுர்வேத நிவாரணமும்! (sponsored content)

மூட்டு என்பது இரண்டு எலும்புகளை இணைக்கும் பகுதி. நாம் சிரமமின்றி நகர்வதற்கு உதவுவது இந்த மூட்டுகளே. இந்த மூட்டுகளுக்கு ஏதேனும் பிரச்னை வரும்போது மிகுந்த வலி உண்டாகும். உடலில், நகரும் பாகங்கள் பல இருந்தாலும், மூட்டுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. `ஆர்த்ரைட்டிஸ்’ எனப்படும் மூட்டுவலிக்கு பெரும்பாலும் வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவைதான் முக்கியக் காரணங்கள் என்று கூறப்படுகிறது. பின்வரும் பட்டியல், வெவ்வேறு வகையான மூட்டுவலிகளையும், அவை எதனால் உண்டாகின்றன என்பதையும் பற்றி் தெளிவாக விளக்குகிறது. 

மூட்டுவலி / ஆர்த்ரைட்டிஸ் வரக் காரணங்கள்...

மூட்டுகள் இயல்பாக தன் பணிகளைச் செய்ய உதவுவது ‘காட்ரிலேஜ்’ என்ற முட்டியைச் சூழ்ந்து இருக்கும் வழவழப்பான பொருள். இந்தக் காட்ரிலேஜ், ஏதாவது காரணத்தால் பாதிக்கப்படும்போதும், தசைகள் வலுவிழக்கும்போதும் மூட்டுவலி வருகிறது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு சாதாரண நேரங்களில் மூட்டு வலிக்காது. ஆனால், ஏதாவது வேலை செய்யும்போது, மூட்டு வலிக்கும். அதற்கு மருந்து எடுக்கும்போதும், மசாஜ் செய்வதுபோல நீவிவிடும்போதும் அந்த வலி நீங்கிவிடும். ஆனால், மீண்டும் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு இதே பிரச்னை வரும். இது காட்ரிலேஜ் தேய்வதால் உண்டாகும் மூட்டுவலி. இதற்கு `ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்’ என்று பெயர். இதை ஆரம்ப நாட்களிலேயே கண்டறிந்துவிட்டால் பிசியோதெரப்பி, உடற்பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால், ‘ஆஸ்டியோமைலிடிஸ்’ (Osteomyelitis) எனப்படும் மூன்றாவது நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு.

இன்னொரு காரணம் சற்று விந்தையானது. உட்கட்சிப் பூசல்போல, நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் செல்களே சில சமயங்களில் மூட்டுகளைத் தாக்கத் தொடங்கும். இதனால் பாதிக்கப்படும்போது எங்கெல்லாம் எலும்புகள் இணைகின்றனவோ அங்கெல்லாம் வலி உண்டாகும். கைகள், கால்கள், கை விரல்கள், கால் விரல்கள் எனப் பாரபட்சம் பார்க்காமல் எல்லா இடங்களிலும் வலி உண்டாகும். சில சமயம் வீக்கமும் உண்டாகலாம். இந்த வகை மூட்டுவலியை ‘ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ என்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடிக்கடி காய்ச்சல் வரும், உடல் எடை குறையும், எழுந்து நடப்பதற்கே சிரமத்தை உண்டாக்கிவிடும். இது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்ற நிலைமை வரை தள்ளிவிடும்.

`பர்சைட்டிஸ்’ (Bursitis) எனப்படும் மூட்டுவலி, பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோருக்கு வரக்கூடியது. இது மூட்டுகள் அதிகமாக ஒன்றோடொன்று உராய்ந்து (அதிக உழைப்பால் சோர்வாகி) வலியை உண்டாக்குவது. பணியிடங்களில் ஒழுங்கான முறையில் அமராமல் இருப்பவர்களுக்கும் இந்த வகை வலி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. மேலும், ரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகமானாலும்கூட மூட்டுவலி ஏற்படலாம். இதற்கு உடல் எடை அதிகரிப்பது காரணமாக அமைகிறது.

மூட்டுவலிக்குத் தீர்வளிக்கும் ஆயுர்வேத மருத்துவம்

நீண்டகாலமாக மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு நிரந்தரத் தீர்வளிப்பதோடு, பக்க விளைவுகள் எதுவும் தருவதில்லை இந்த ஆயுர்வேத மருத்துவம். இந்த மருத்துவச் சிகிச்சையில் மூலிகைகள், தியானம் மற்றும் யோகா ஆகியவை பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்டியோ  ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைகள் பெரும்பாலும் குணமடைவதாகக் கூறப்படுகிறது. மூட்டுவலிக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல பலனளிக்கும் சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது இந்த ஆயுர்வேத மருத்துவம்.

ஆர்த்தோக்யூர்

ஓமம், மஞ்சள், அஸ்வகந்தா, குங்கிலியம், இஞ்சி, திரிபலா, குக்குலு மற்றும் சதாவரி போன்ற மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் மற்றும் எண்ணெய்கள், ஆர்த்தோக்யூர் ஆயில், ஆர்த்தோக்யூர் டேப்லெட், ஆர்த்தோக்யூர் பவுடர் மற்றும் ஆர்த்தோக்யூர் கிழி போன்ற பல்வேறு வழிகளில் மூட்டுவலிகளைப் பக்க விளைவுகள் ஏதுமின்றிப்போக்கிட உதவுகிறது.

ஓமம் கொண்டு செறிவூட்டப்பட்ட ஆர்த்தோ பவுடர், மூட்டுகளில் படிந்து வலியை உண்டாக்கும் யூரிக் அமிலத் துகள்களைச் சிறுநீர் மூலம் வெளியேற்றி நரம்புகளுக்கும் தசைகளுக்கும் வலுவூட்டுகிறது. ஆர்த்தோக்யூர் ஆயிலை, வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்து வருவதால் வீக்கமும் வலியும் குறைகிறது. ‘மஹா யோகராஜா குக்கலு’ கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்த்தோக்யூர் மாத்திரைகள் மூட்டுகளுக்குப் புத்துயிர் ஊட்டி தசைகளை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. ஆர்த்தோக்யூர் ஆயிலை 10 மி.லி அளவு கிண்ணத்தில் எடுத்து, மிதமாகச் சூடாக்கி, கிழியைக் (Kizhi) கொண்டு சிறிது சிறிதாகத் தொட்டு, 10-15 நிமிடங்கள் தினமும், வாரம் இருமுறை மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மூட்டு வலிக்கு நிரந்தரத் தீர்வளிக்க கிளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்