இந்தியாவில் 58% குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 58% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. உணவில் போதுமான அளவில் இரும்புச் சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் கீரை, பழங்கள் போன்றவற்றை சரிவர சாப்பிடாத காரணத்தினாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.

ரத்தசோகையால் ஏற்படும் நிலையில் தொற்றுநோய் பாதிப்பும் மூளை வளர்ச்சி பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  2015 - 2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் ஆறு லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரே வயதைச் சேர்ந்த குழந்தைகளில் 38% குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 21% குழந்தைகள் பிற குறைகளுடனும், 30% எடை குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

2015-ம் ஆண்டின் கணக்குப்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்ட குழந்தைகளின்  எண்ணிக்கை  12.4 கோடி ஆகும். அதில் 7.2 கோடி குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!