வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (13/03/2017)

கடைசி தொடர்பு:19:24 (13/03/2017)

நீரிழிவு நோய்க்கு விரைவில் தீர்வு?

உலகின் சிம்ம சொப்பனமாகத் திகழும் நீரிழிவு நோய்க்கு எதிராக நடந்து வரும் தடுப்பூசி சோதனையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  BCG எனப்படும் இந்தத் தடுப்பூசி, காச நோய்க்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நீரிழிவு நோய்க்கும் இந்த தடுப்பூசி நல்ல பலனைக் கொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்த ஆய்வை நடத்தி வரும் மருத்துவர் டெனிஸ் ஃபவ்ஸ்ட்மேன் கூறுகையில்,  BCG தடுப்பூசியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. ஆனால், இதன்மூலம் இன்னும் சிறந்த சிகிச்சையை வழங்கவேண்டும் என்பதே எங்களது லட்சியம். இதன் காரணமாக டைப்-ஒன் நீரிழிவு நோயால் நீண்ட ஆண்டுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோதனையை செய்து பார்க்க உள்ளோம்' என்றார்.

 

Vaccine against diabates

 

முன், 5 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 18 வயது முதல் 60 வயது உடையவர்களுக்கு அடுத்தக்கட்ட சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, டைப்-ஒன் நீரிழிவு நோயின் முதல் நிலையில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது நடத்தவுள்ள சோதனை நீரிழிவு நோயின் அடுத்தநிலையில் உள்ளவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.

இவர்களுக்கு முதலில் மாதத்துக்கு இரு தடுப்பூசி என்றும் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் 4 ஆண்டுகளுக்கும் தடுப்பூசி சோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க