இந்தியர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் தெரியுமா?

தூக்கம் குறித்து, 'Fitbit' என்ற ஃபிட்னஸ் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, உலகம் முழுவதும், கடந்த ஆண்டு 18 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பட்டியலில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முன்னிலை வகிக்க, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன.

குறிப்பாக, இந்திய மக்கள் மிகக்குறைந்த நேரமே தூங்குவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் சராசரியாக தினசரி 6.55 மணி நேரமே தூங்குகிறார்களாம். நிம்மதியாக தூங்குவதில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு, சராசரியாக 7.25 மணி நேரம் தூங்குகிறார்களாம்.

இங்கிலாந்தில் தினசரி 7.16 மணி நேரம், ஆஸ்திரேலியாவில் தினசரி 7.15 மணி நேரம் தூங்குகின்றார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளிலும் சராசரியாக தினசரி 7 மணி நேரம் தூங்க, அமெரிக்கர்கள் தினசரி 6.99 மணி நேரம் தூங்குகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

முக்கியமாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளவர்கள், இந்தியாவைவிட குறைந்த நேரமே தூங்குகிறார்களாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி 8 மணி நேரம் தூங்குவது அவசியம் என்ற நிலையில், சரியான தூக்கமின்மை உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!