Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லிவர் டானிக்... நிறைவான ஆரோக்கியப் பலன்கள் தரும் எலுமிச்சை! #HealthTips

லுமிச்சை... குறைந்த விலையில் நிறைவான பலன் தரும் பழங்களில் ஒன்று. சத்துகள் நிறைந்தது; சர்வரோக நிவாரணி. 1784-ம் ஆண்டு கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) என்பவர் தனது ஆராய்ச்சியில் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தார்.  உதாரணமாக, இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மானிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் ரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களைவிட மேலைநாட்டினர் எலுமிச்சைப் பழத்தையும் அதன் விதை, தோல் என அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளன. 

எலுமிச்சை

எலுமிச்சைச் சாற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பது பற்றி ஈரோட்டைச்சேர்ந்த உணவியல் நிபுணர் மா.பிரியா பிரபாகரன் விளக்குகிறார்...

பலன்கள்
* எலுமிச்சைப்பழச் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடித்தால், செரிமானப் பிரச்னைகள், குமட்டல், வாந்தி போன்றவை சரியாகும்.பிரியா பிரபாகரன்

* ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது என்பதால், அடிக்கடி இதன் சாற்றை அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறி ரத்தம் தூய்மையாகும். 

* கல்லீரலின் செயல்பாட்டை அதிகப்படுத்த பெரிதும் துணைபுரிவதால்  `லிவர் டானிக்' என்று அழைக்கப்படுகிறது. 

* இதில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. தினமும் இதன் சாற்றை அருந்துவது தோலைப் பளபளப்பாக்கும். உடலுக்கு மெருகூட்டும். தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றும். கரும்புள்ளிகளை மறையச் செய்யும். மொத்தத்தில் மேனி அழகுக்குத் தேவையான ஓர் இயற்கை உணவாகவும் இது செயல்படுகிறது.

*  உடலைக் குளிர்ச்சியாக்கக்கூடியது என்பதால், தோல் எரிச்சல் மற்றும் வெப்ப நோய்களிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும். 

* வாயில் துர்நாற்றம் இருப்பதோடு பற்கள், அதன் இடுக்குகளில், ஈறில் சிக்கல்கள் இருந்தால் இதன் சாற்றால் மசாஜ் செய்யலாம்.  

எலுமிச்சைசாறு

* உடல் எடை குறைய தினமும் காலையில் இளம்சூடான தண்ணீருடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும். அதிலும் காலையில் கண் விழித்ததும் அருந்தினால் நல்ல பலன் தரும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பிரச்னையை உண்டாக்கும் என்று சொல்வது தவறான புரிதல்.

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு இதன் சாறு மிக நல்ல பயன் தரும். உயர் ரத்த அழுத்தம், தலைசுற்றல் நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உதவும். எலுமிச்சைப்பழச் சாறு மன அழுத்தத்தைக்கூட குறைக்கும்.

* காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் இதன் சாறு நிவாரணம் தரும். 

* மூட்டுவலி, உடல் தசைகளில் வலிக்கு இதன் சாறு மருந்து.

எலுமிச்சை சாறு

* 70 கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழு எலுமிச்சைப்பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். காலையில் குடிப்பது நல்லது. 70 கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்கள் அரை எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தலாம்.

* உடலில் களைப்பைப் போக்கி புத்துணர்வு தரும்.  

* உடலில் தேய்த்துக் குளித்தால் வறட்சி நீங்கும். 

* உடல் நமைச்சலைப் போக்கும். 

* மாதவிலக்கின்போது உண்டாகும் வலியைக் குறைக்கும். 

* மூலத்துக்கு சிறந்த மருந்து.

எலுமிச்சம் பழம்

நோய்கள் பலவற்றிலிருந்து எலுமிச்சை நிவாரணம் தரக்கூடியது என்றபோதிலும்  `அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். உதாரணமாக, எலுமிச்சையிலுள்ள அதிகப்படியான அமிலத்தன்மை பற்களிலுள்ள எனாமலை அழித்துவிடும். அதிகப்படியான அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக எலுமிச்சைச் சாறு பருகினால், தொடர்ந்து சிறுநீர் கழிக்க நேர்வதோடு, உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அலர்ஜி, தலைவலி மற்றும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஒரு நாளைக் இரண்டு வேளை மட்டும் உபயோகிப்பது நல்லது. அதிலும் எலுமிச்சைச் சாற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது. 

- செ.சங்கீதா, மாணவப் பத்திரிகையாளர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement