இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நோய் எது? #HealthSurvey #VikatanSurvey

வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம்... வருமானம் மட்டுமே இலக்கு... உடல்நலனில் அக்கறை இன்மை... இயந்திரத்தனமான வாழ்க்கை... பலரின் லைஃப் ஸ்டைல் இன்றைக்கு இதுதான். விளைவு, சம்பாதிக்கும் பணத்தில் முக்கால்வாசியை மருத்துவத்துக்குச் செலவு செய்யும் நிலைமை.

நோய்  

மேலும், இன்றைய வாழ்க்கைச் சூழலில் உணவு கலாசாரம், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் மனநெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ரத்த அழுத்தம், உடற்பருமன், இதய நோய், சர்க்கரைநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாக அச்சுறுத்துகின்றன ஆய்வுகள். 

இது ஒருபுறம் இருக்கட்டும்... அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் ஏற்படும் காற்று மாசுபாடு சுவாச பிரச்னைகளை உண்டாக்குகிறது. நாம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், மொபைல்போன், மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றாலும் புதிது புதிதாக நோய்கள் அதிகரித்துவருகின்றன.

நோய் 

எனவே, ‘இன்றைய இளைய தலைமுறையினரின்  உடல்நலத்தை பாதிப்பது எது’ என்பதை அறியும் நோக்கோடு இந்த சர்வே நடத்தப்படுகிறது. இந்த சர்வேயில் நீங்களும் பங்குபெற இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

சர்வே முடிவில் இளைஞர்களை அதிகம் பாதித்தாக அறியப்படும் நோய்க்கான  தீர்வுகள் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள் பெற்று வெளியிடப்படும். 

இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நோய் எது? #TwoMinuteSurvey

 

1). உங்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா? *

2). மலச்சிக்கல்... நீங்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னையா? *

3). உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா? *

4). பொடுகு, முடி உதிர்வு போன்ற தலைமுடி பிரச்னை உள்ளதா? *

5). நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுவரா? *

6). உடற்பருமன்தான் உங்கள் தலையாய பிரச்னையா? *

7). உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளனவா? *

8). சிறுநீரக கல் போன்ற சிறுநீரக பிரச்னை உள்ளதா? *

9). தூக்கமின்மையால் அவதிப்படுகிறீகளா? *

10). குழந்தையின்மை, பாலியல் பிரச்னைகள், செக்ஸில் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகள் உள்ளதா? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)


- ஜி.லட்சுமணன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!