காசநோய் பிரச்னைக்கு புதிய தீர்வை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

 

 

மருந்துகளால் சரி செய்ய முடியாத தீவிரமான காசநோயை, உடனடியாகக் கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்துள்ளனர். காசநோய் நோய் என்பது, மனிதர்களை வாட்டிவதைக்கும் ஒரு கொடூரமான நோயாகப் பார்க்கப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்படியிருந்தும்கூட அது முற்றிலுமாக சரியாகாமல் பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டன் விஞ்ஞானிகள், இந்த காசநோய் பிரச்னையை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த ஆராய்ச்சிகளின் முடிவாக, மரபணு மூலக்கூறு கட்டமைப்பைப் பயன்படுத்தி காசநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து விடலாம்; பின்னர் அதே முறையைப் பயன்படுத்தி, காசநோயை எளிதாக குணப்படுத்தி விடலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். மரபணு மூலக்கூறு கட்டமைப்பைப் பயன்படுத்தி நோயைச் சரிசெய்யும் முறையானது. காசநோய் பிரச்னைக்கு சரியான தீர்வைத் தரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!