பயம், கோபம், மன அழுத்தம் போக்கும் பாச் ஃபிளவர் தெரபி!

ன்றைய வாழ்க்கைச்சூழலில் நோய்களுக்காக பணம் செலவழிப்பது அதிகமாகியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சிலர் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் மாத்திரைகளின் அளவைப் பார்த்தால் நமக்கு மலைப்பே ஏற்பட்டுவிடும். ஒருபக்கம், எவ்வளவு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் நோயின் தீவிரம் குறைவதில்லை. இன்னொரு பக்கம், நோய்களின் வரவும் குறையவில்லை. `இன்றைக்குப் படையெடுக்கும் 70 சதவிகித நோய்களுக்கு மனிதர்களின் உணர்வுகள்தான் காரணம்’ என்று பல ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இது தெரிந்திருந்தும், நாம் கவலை, பயம், பதற்றம், மன உளைச்சல்... என உடம்புக்கு ஆகாத உணர்வுகளுடனேயே அன்றாட வாழ்க்கையை வாழ்கிறோம். இதுபோன்ற எதிர்மறை உணர்வுகளைக் குறைத்து, நோய்களை குணப்படுத்தும் சிகிச்சைதான், ` பாச் ஃபிளவர் தெரபி’ (Bach Flower Therapy). இந்தச் சிகிச்சை தற்போது பிரபலமாகிவருகிறது. பாச் ஃபிளவர் தெரபி, அதன் பயன்கள் குறித்து அக்குபிரஷர் மற்றும் பாச் ஃபிளவர் தெரபி நிபுணர் கணேஷ் கிருஷ்ண மூர்த்தி விவரிக்கிறார் இங்கே...

பாச் ஃபிளவர் தெரபி

``இயற்கைக்கும் சங்கீதத்துக்கும் தனி அதிர்வுகள் உள்ளன. அவை நம்மை அறியாமலேயே மன அமைதிக்கும் நம் வாழ்வுக்கும் பல நன்மைகளைச் செய்கின்றன. ஒவ்வொரு மலருக்கும்  தனித்தனி ஆற்றல் உண்டு. ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நோயைக் குணப்படுத்தும். இப்படி அனைத்துவிதமான நோய்களையும் மலர்களைக்கொண்டு குணப்படுத்தலாம். 80 ஆண்டுகளுக்கு  முன்னர் லண்டனைச் சார்ந்த ஹோமியோபதி மருத்துவர் எட்வர்ட் பாச் (Edward Bach), பாச் ஃபிளவர் தெரபியைக் கண்டுபிடித்தார். இந்த சிகிச்சையில், 38 வகையான மலர்களில் இருந்து சாறு எடுக்கப்பட்டு, அவற்றைக்கொண்டு மனித உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகள் டாக்டர் கணேஷ்சரிசெய்யப்படுகின்றன; எதிர்மறை உணர்வுகளும் மாற்றப்படுகின்றன. இதனால் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தாலும், அதனைச் சரிசெய்ய முடியும். இந்தச் சிகிச்சை முற்றிலும் இயற்கையானது; பாதுகாப்பானது. சிறு குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், முதியவர்களுக்கும்கூட இந்தச் சிகிச்சையை அளிக்கலாம்.

70 வயது பாட்டி ஒருவருக்கு சர்க்கரைநோய், மூட்டு வலி, காது வலி போன்ற பல பிரச்னைகள். பத்து ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும், உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் பாச் ஃபிளவர் சிகிச்சைக்கு வந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம். தன் கணவர், இளம் வயதில் செய்த கொடுமைகளை மறக்காமல், இன்றைக்கும் மனதிலேயே வைத்திருந்தார். இதனால் கோபம், கவலை, வெறுப்பு போன்ற பல எதிர்மறை உணர்வுகளால் அவரின் நோய்கள் தீவிரமடைந்துவிட்டதை உணர்ந்தேன். அவருக்கு `ஹோலி’ எனும் பூவின் சாரத்தைக்கொண்டு சிகிச்சை அளித்தோம். ஒரே மாதத்தில் அவர் குணாதிசயங்களில் மாற்றம் தெரிந்தது. தன் கணவரைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக அவருக்கு இருந்த சர்க்கரைநோய் கட்டுக்குள் வரத் தொடங்கியது. மூட்டு வலி மற்றும் காது வலி ஆகியவை குறைந்து, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஹோலி பூ பகை, கோபம், பொறாமை, வெறுப்பு, சீற்றம், பழி வாங்கும் உணர்ச்சி ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.

அக்ரிமோனி

`அக்ரிமோனி’ என்னும் மலர், நம் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. சிலர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தாமலும், தங்களுக்கு என்ன தேவை என்பதே தெரியாமலும் இருப்பார்கள். இவர்களுக்கு எளிதில் மனஅழுத்தம் வந்துவிடும். உதாரணமாக ஒரு சம்பவம். ஒரு  ஐ.டி பெண் ஊழியர் தன் தந்தையுடன் சிகிச்சைக்கு வந்திருந்தார். பெண்ணின் தந்தை சொன்னார்... "என் பொண்ணு ரொம்ப அமைதியான டைப். யார் கூடவும் சகஜமா பழக மாட்டா. அதுவாவது பரவாயில்லை. கொஞ்ச நாளா என்கிட்டகூட பேசுறது இல்லை. அடிக்கடி ஜுரம் வந்துடுது. `ஏன் இப்பிடி?’னு காரணம் கேட்டா, அதுக்கும் வாய் திறக்காம அமைதியா இருக்கா’’ என்றார். இத்தனைக்கும் அருகில் அமர்ந்திருந்த அந்தப் பெண், `ஆம்’, `இல்லை’ என்ற ஒற்றை வார்த்தை பதில்கூடச் சொல்லவில்லை. அந்தப் பெண்ணுக்கு `அக்ரிமோனி’ மலர் சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தோம். சில நாட்களிலேயே அவள் மெள்ள மெள்ள மனம்விட்டுப் பேசத் தொடங்கினாள். அலுவலகத்தில், சக ஊழியர் ஒருவர் தன்னை விரும்புவதாகவும், அதை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்கிற குழப்பம் ஒருபக்கம் என்றும், வீட்டில் சொன்னால் என்ன சொல்வார்களோ என்று பயந்ததாகவும் கூறினாள். இப்படி மனம்விட்டுப் பேசினால் பிரச்னைக்கான தீர்வும் கிடைத்துவிடும்; நோயும் வராது.   

எப்போதும், எல்லோரையும், எதற்கெடுத்தாலும் குறைகூறிகொண்டிருப்பவர்களுக்கு `வில்லோ’ பூவினால் சிகிச்சையளிக்கலாம். இந்தச் சிகிச்சையில் அவர்களுக்கு வாழ்வில் ஒருவித திருப்தி வந்துவிடும். மன அமைதி அடைவார்கள்.

`காட்டரசு மரப் பூ’,  எப்போதும் பதற்றம், பயத்துடன் இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு தரும். இதனால் நிதானமும், வருவதை எதிர்க்கொள்ளும் ஆற்றலும் கிடைக்கும்.

சில குழந்தைகள் கெட்டக் கனவுகளால் பயத்தில் தூங்காமல், இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு `ராக் ரோஸ்’ என்னும் மலரின் சாரம் சிறந்த பலனை அளிக்கும். ஒருமுறை விபத்து ஏற்பட்டுவிட்டால், மறுமுறை வண்டி ஓட்டுவதற்கே பயப்படுவார்கள் சிலர். அவர்களுக்கு இந்தச் சிகிச்சையை அளிக்கலாம்.

சிலர் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கைகளைக் கழுவுவார்கள். அதே நபர் மூன்று நாட்கள் ஆனாலும் குளிக்காமலும் இருப்பார்கள். இதுபோன்று நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களையும் பாச் ஃபிளவர் தெரபியால் குணப்படுத்த முடியும்.

போதுமான ஆற்றல் இல்லாமல் அன்றாட வேலைகளைச் செய்யவும் கஷ்டப்படுபவர்களுக்கு ஆலிவ் மலரின் சாரம் சிறந்தது.

ஸ்வீட் செஸ்ட் நட்

ஒரு சிறிய வேலையைச் செய்யச் சொன்னாலும், `ஐயோ... நான் எப்படி அதைப் பண்ணுவேன்? எனக்கு தெரியாது. அது ரொம்பக் கஷ்டம்’ என்று தோவியைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும், முயற்சி செய்வதைத் தவிர்ப்பவர்களுக்கும் `ஸ்வீட் செஸ்ட் நட்’ மலரின் சாரம் நல்ல தீர்வு தரும்.

பாச் ஃபிளவர் தெரபியைத் தொடர்ந்து ஒரு மண்டலம் எடுத்துக்கொண்டால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நல்ல முன்னேற்றம் காணலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!