Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்கு வரும் பற்சிதைவு (Baby Bottle tooth decay) என்றால் என்ன? (sponsored content)

குழந்தைகளுக்கு வரும் பற்சிதைவு (Baby Bottle tooth decay) மழலைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இது பொதுவாக முன் பற்களில் ஏற்படுகிறது என்றாலும் மற்ற பற்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

பற்சிதைவுக்கான காரணங்கள்:

‘குழந்தைகளுக்கான பற்சிதைவு’ (BBTD) பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ், பால் பவுடர் போன்று இயற்கையிலேயே சர்க்கரைச் சத்து கொண்ட திரவ உணவுகளால் உண்டாகிறது. இந்த உணவுகளில் உள்ள சர்க்கரை குழந்தைகளின் பற்களில் நீண்ட நேரம்  தொடர்ந்து இருப்பதால் இது உண்டாகிறது. நம் பற்களில் பல்வேறு பாக்டீரியாக்கள் உள்ளன; இவை இந்தச் சர்க்கரையை அமிலங்களாக மாற்றி, பற்களுக்குத் தீங்கிழைக்கின்றன. குழந்தைகள் உறங்கும் நேரத்தில் அல்லது பொதுவாக இரவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட திரவத்தைக் குடிப்பதற்குக் கொடுப்பதால், அது பாதிப்பை உண்டாக்குவதாக அமைகிறது. அதற்குக் காரணம் எச்சிலின் அளவு உறங்கும் நேரத்தில் குறைவதே.

குழந்தைகள் பற்சிதைவினால் உண்டாகும் பிரச்னைகள்:

இந்தக் குழந்தைகள் பற்சிதைவை துவக்கத்திலேயே கவனித்து சரிசெய்யாவிட்டால், அது மிக அதிகமான வலியையும் தொற்றையும் உருவாக்கிவிடும். இதனால் மோசமாக பாதிப்படையும் பற்கள் நீக்கப்பட வேண்டிய அபாயம் உண்டாகும். மேலும் இது பேச்சு தொடர்பான பிரச்னைகளையும் உருவாக்கிவிடக்கூடும்.

இந்தக் குழந்தைப் பற்சிதைவை எப்படித் தடுக்கலாம்?

ஒவ்வொரு முறை குழந்தைக்கு உணவைக் கொடுத்த பிறகும், குழந்தையின் வாயை ஒரு சுத்தமான துணியால் துடைத்துவிடவேண்டும்.

குழந்தைக்கு முதல் பல் முளைக்கும்போது, குழந்தைகளுக்கான ஒரு சிறிய பிரஷ்ஷில், சிறிதளவு பற்பசையை வைத்து மென்மையாகத் தடவிக்கொடுக்கலாம் (மூன்று வயதுவரை).

உங்கள் குழந்தைக்கு ஒரு வயதின்போது, பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துக்கொள்வது நல்லது.


விரல் சூப்புதல்:

விரல் சூப்பும் உணர்வு பொதுவாக குழந்தையின் ஆறு மாதங்கள் வரை இருக்கும். 
ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த உணர்வு குறைந்துவிடும். ஆனால், சில குழந்தைகள் அதற்கு மேலும் தொடர்வார்கள். நாளடைவில் இது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறி, பசி, கோபம், பயம், அமைதியின்றி இருக்கும் நேரங்கள் மற்றும் வெறுப்பாய் தோன்றும் தருணங்களில் எல்லாம் தொடரக்கூடும்.

நான்கு, ஐந்து வயது வரை தீவிரமாக விரல் சூப்பும் குழந்தைகள் பற்கள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் பேச்சுத் திறனில் சிக்கல்களும் உண்டாகலாம்.

விரல் சூப்பும் பழக்கத்தை தடுப்பது எவ்வாறு?

குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பவேண்டும். அவர்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடிய பொம்மைகள் அல்லது வேறு ஏதாவது ஒன்றை  குழந்தையின் கைகளில் கொடுக்கலாம்.

கைகளுக்கு ஒரு கிளவுஸ் அணிவிப்பதன் மூலமாகவோ, கட்டை விரலைச் சுற்றி துணி, அல்லது பேண்டேஜ் சுற்றி விடுவதன் மூலமாகவோ குழந்தைக்கு விரல் சூப்புவது தவறு என்று அவ்வப்போது உணர்த்த முடியும்.

விரல் சூப்பாமல் இருக்கும் தருணங்களில், அவர்களை அதற்கென பாராட்டுவதும், பரிசளிப்பதும்கூட குழந்தைகள் அந்தப் பழக்கத்தை கைவிட உதவியாக இருக்கும்.

விரல் சூப்பிய காரணத்துக்காக, குழந்தைகளை பொது இடங்களில் வைத்து திட்டுவதோ, தண்டனை தருவதோ செய்யாதீர்கள். இது குழந்தைகளுக்கு சுயமரியாதையை குறைக்கும் செயலாகவே அமையும்.. 

வீட்டில் செய்யக்கூடிய மேற்சொன்ன யுக்திகள் எதுவும் பலனளிக்கவில்லை என்றால், உங்கள் குழந்தையின் இப்பழக்கம் உங்களுக்கு வருத்தத்தையும், கோபத்தையும் அளிக்கிறது என்றால் உடனடியாக இதைப்பற்றி உங்கள் குழந்தையை பராமரிக்கும் மருத்துவரை அணுகி, அவரிடம் நிலைமையை விளக்கிக் கூறுங்கள். 

மேலும் விவரங்களுக்கு 044-49583232 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது http://www.pearlsdentistry.com என்ற  முகவரியி்லும் விவரங்கள் அறியலாம்.

குழந்தை மற்றும் இளம் பருவத்தினரிடம் காணப்படும் மிகப்பெரிய பல் பிரச்னைகளை அடுத்த கட்டுரையில் காணலாம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement