மகாராஷ்டிரா பள்ளிகளில் பீட்சா, பர்கருக்குத் தடை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட சத்தற்ற துரித உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுகள்

பீட்சா, பர்கர், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகளால் உடல்நலக் கோளாறு ஏற்படுவதாகத் தொடர்ந்து கூறப்பட்டுவருகிறது. இதனால், உடலில் அதிகமான கொழுப்புச்சத்து சேர்வதுடன், பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைப் பள்ளி உணவகங்களில் விற்பனை செய்யக்கூடாது என மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட கமிட்டி, கொழுப்பு மற்றும் அதிக உப்புத்தன்மை கொண்ட உணவுகளை உண்பதால் இருதயக் கோளாறு, உடல் பருமன், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்கள் வருவதாக அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி சப்பாத்தி, இட்லி, சாம்பார், காய்கறிகள், பாயசம் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே விற்பனைசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!