இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நோய் எது? #VikatanSurveyResults

வசதி, வருமானமே இலக்கு, இயந்திரம் போன்ற வாழ்க்கை என்பதே இப்போதைய மக்களின் வாழ்க்கை நடைமுறையாக மாறிவிட்டது. அதன் பரிசு... நோய்கள். விளைவாக, வருமானத்தில் முக்கால்வாசிப் பணத்தை மருத்துவத்துக்காகச் செலவு செய்கிறோம். 

அச்சுறுத்தும் நோய்


சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உடற்பருமன், சிறுநீரகக் கல், தூக்கமின்மை, முடி உதிர்வுப் பிரச்னை, குழந்தையின்மை, பாலியல் பிரச்னைகள், செக்ஸில் ஆர்வமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இவற்றை அடிப்படையாகக்கொண்டு  இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தும் நோய் எது? #HealthSurvey #VikatanSurvey என்று விகடன் தளத்தில் சர்வே நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே... 

நோய்

`உங்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு `இல்லை’ என்று 83.8% பேர் கூறியிருந்தனர். 'ஆம்' என்று 16.2% பேர் கூறியிருக்கிறார்கள். லெஸ் டென்ஷன்... மோர் வோர்க் பாஸ்! 

மலச்சிக்கல்

`மலச்சிக்கல்... நீங்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னையா?’ என்று கேட்டிருந்தோம். 63.7% பேர் `இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். 36.3% பேர் `ஆம்’ என்று பதிலளித்துள்ளார்கள். இரும்பையும் துரும்பாக்குவோம்!

மனஅழுத்தம்

`உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தோம். `ஆம் என்ற பதிலைச் சொன்னவர்கள் 57.2% பேர். `இல்லை’ என்றவர்கள் 42.8% பேர். ஆல் இஸ் வெல் கய்ஸ்!

பொடுகு

`பொடுகு, முடி உதிர்வு போன்ற தலைமுடி பிரச்னை உள்ளதா?’ என்பது நம் கேள்வி. இதற்கு, `ஆம்’ என்று 69% பேரும், `இல்லை’ என்று 31% பேரும் பதிலளித்துள்ளார்கள். கூலா இருங்க ட்யூடு... கூந்தல் நல்லா இருக்கும்!

சர்க்கரை நோய்

`நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா?’ என்ற கேள்விக்கு, `இல்லை’ என்றவர்கள் 92.2% பேர். `ஆம்’ என்றவர்கள் 7.8% பேர். நீங்கள் மிகவும் இனிப்பானவரே!

உடற்பருமன்

`உடற்பருமன்தான் உங்கள் தலையாயப் பிரச்னையா?’ என்று கேட்டிருந்தோம். `இல்லை’ என்கிறார்கள் 72.7% பேர். `ஆம் என்கிறார்கள் 27.3% பேர். ஸ்மார்ட்டா வேலை செய்ங்க... ஃபிட்டா இருங்க!

இதய நோய்கள்

`உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளனவா?’ என்ற கேள்விக்கு `இல்லை’ என பதில் சொன்னவர்கள் 93.3% பேர். `ஆம் என்றவர்கள் 6.7% பேர். `டேக் இட் ஈஸி’யா இருங்க... இதயத்தை வெல்லுங்க! 

சிறுநீரகக் கல்

`சிறுநீரகக் கல் போன்ற சிறுநீரகப் பிரச்னை உள்ளதா?’ என்று கேட்டிருந்தோம். `இல்லை’ என்கிறார்கள் 91.8% பேர். `ஆம்’ என்கிறார்கள் 8.2% பேர். கல்லைத் தடுக்க, தண்ணீர் போதும்... கவனம் பாஸ்!

தூக்கமின்மை

`தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா?’ என்ற கேள்விக்கு `இல்லை’ என்றார்கள் 63.8% பேர். `ஆம் என்றார்கள் 36.2% பேர். குட்டித் தூக்கமும் கை கொடுக்கும்... தூக்கம் நல்லது!

குழந்தையின்மை

`குழந்தையின்மை, பாலியல் பிரச்னைகள், செக்ஸில் ஆர்வமின்மை போன்ற பிரச்னைகள் இருக்கின்றனவா?’ என்ற கேள்விக்கு `இல்லை’ என்று 84.7% பேர் பதில் கூறியுள்ளனர். `ஆம்’ என்று பதில் சொன்னவர்கள் 15.3% பேர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!