சமூகப் பொறுப்புடன் காட்சிப்படுத்தப்படுகிறதா ‘பிக் பாஸ்’? - மனநலவியல் நிபுணர்கள் கருத்து என்ன?

பிக் பாஸ் பிக் பாஸ்... எனக்கு ஒரு சாக்லேட் கிடைக்குமா’’ - பேருந்தில் தன் அம்மாவின் கையில் உள்ள சாக்லேட்டை இப்படிக் கேட்கிறது அந்த எட்டு வயதுக் குழந்தை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒரு நடிகை அப்படித்தான் தனக்குத் தேவையான பொருள்களைக் கேட்பாராம்.

பிக் பாஸ்

“டிக்கெட், டிக்கெட்” என்று கத்தியதை காதில் வாங்காமல், மொபைலில் `பிக் பாஸ்’ பார்த்துக்கொண்டிருந்த இளைஞனை கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கிறார் நடத்துநர்.

பேருந்துப் பயணத்தில் மட்டுமல்ல... பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் என எந்த இடத்துக்குப் போனாலும், அங்கே இரண்டு பேர், `பிக் பாஸ்’ மனநல மருத்துவர் குறிஞ்சிபற்றிப் பேசுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரோ ஒருவருக்கு ஆதரவாக அல்லது எதிர்ப்பாக விவாதிக்கிறார்கள்.

`ஒரு வீடு... வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அதற்குள் 100 நாள்கள் வாழ்வதென்பது, உண்மையில் பெரும் உளவியல் சவால்தான். ஆனால், அப்படி வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல... அவர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அப்படியான உளவியல் சிக்கல்கள் எழலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.

"உளவியல்ரீதியாகப் பார்த்தால் இந்த நிகழ்ச்சி ஒரு சமூகப் பரிசோதனை (Social experiment) என்று சொல்லலாம். புதிய நபர்களுடன் ஒன்றாக இருப்பதற்கு இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று, விட்டுகொடுத்தல் மற்றொன்று, தகவல் பரிமாற்றம். இந்த இரண்டு விஷயங்களிலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதே இந்த நிகழ்ச்சி.

ஒவ்வொருவருக்கும் ஒரு குணம், தனித்தன்மை இருக்கும். அப்படி வேறுபட்ட குணாதிசயமுள்ள பல்வேறு மனிதர்கள் கூடி வாழும்போது, நிறைய சமரசங்கள், விட்டுக்கொடுத்தல்கள் தேவைப்படும். அது மிகச்சிறந்த கற்றலாக அமையும்.

காயத்ரி ரகுராம்

ஆனால், இப்போது `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் சம்பவங்கள் வேறு மாதிரி இருக்கின்றன. இது பார்வையாளர்களுக்குப் பல பாதிப்புகளை உண்டாக்கவே செய்யும்.

நிகழ்ச்சியில் ஒருவரைப் பற்றி மற்றவர்கள், அவருக்கு முன்பு ஒரு மாதிரிப் பேசுவதாகவும், பின்னால் வேறு மாதிரிப் பேசுவதாகவும் காண்பிக்கப்படுகிறது. இது பார்ப்பவர்களிடையே, நம்மிடமும் பிறர் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று நினைக்கத் தூண்டும். அதனால், அனைவரிடமும் விலகி இருக்க வேண்டும் என்ற மனநிலை உண்டாகும். வீட்டில் பெற்றோர், சகோதரர்களுடன் இருக்கும் நெருக்கத்தைக்கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தூண்டும். இதனால், பிற மனிதர்கள் மீதான நம்பிக்கை முழுவதுமாகக் குறைந்துவிடும்.

ஜூலியானா

பெரும்பாலும், இந்த நிகழ்ச்சியில் அடுத்தவர்களின் உணர்வுகளைத் தூண்டும்விதத்தில் பல காட்சிகள் இருக்கின்றன. நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் அசோகன்பங்கேற்பவர்களைவிட இது பார்ப்பவர்களை அதிகமாக பாதிக்கும்.

`எல்லா மனிதர்களும் தவறானவர்கள்’ என்கிற மனநிலையை இந்த நிகழ்ச்சி உண்டாக்குகிறது. சமூகத்தின் மீது ஓர் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அடுத்தவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும் ஒரு மட்டமான சிலிர்ப்புதான்(Cheap thrill) இந்த நிகழ்ச்சியின் அடித்தளமாக இருக்கிறது..." என்கிறார் குறிஞ்சி.

மனநல மருத்துவர் அசோகனும், "இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மிகுந்த உளவியல் சிக்கலை உருவாக்கும்" என்று எச்சரிக்கிறார்.

"இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்டட். பேசவேண்டிய வசனங்களில் இருந்து அத்தனையும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட செயற்கையான ஒரு நிகழ்ச்சி. குறிப்பிட்ட சில உணர்வுகளை மட்டுமே திரும்பத் திரும்ப காட்சிப்படுத்துகின்றனர். எனவே, மக்கள் பெரிய அளவில் தன்னை நிகழ்ச்சிக்குள் ஈடுபடுத்திக் கொள்ளாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும்” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!