யோகாவுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு இருக்கிறதா... விகடன் சர்வே என்ன சொல்கிறது? #VikatanSurveyResults

யோகா என்பது  சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் என வெகு சிலருக்கு மட்டுமே வசப்பட்ட கலையாக ஒரு காலத்தில் இருந்தது. அதன் மகத்துவத்தை உணர்த்தவும், அதைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும் 2015-ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஐ.நா சபை  யோகா தினத்தை சர்வதேச அளவில் அங்கீகரித்தது. இதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் தேதி யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், யோகா உலக நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவிலும் பள்ளிகள், கல்லூரிகளில் யோகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிலும்கூட யோகப்பயிற்சி ஓர் அங்கமாக மாறிவருகிறது. 

யோகா 

இது ஒருபுறம் இருக்க, ஒரு பிரிவினர் யோகா என்பது குறிப்பிட்ட மதத்துக்கே சொந்தமானது என்று பிரசாரம் செய்துவருகிறார்கள். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி, யோகா என்பதே மத அடையாளம்கொண்ட ஒன்று என்ற எண்ணமும் உருவாகிவருகிறது. 

இந்தச் சூழலில் யோகா பற்றிய மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை அறிய விகடன்  ஒரு சர்வே நடத்தியது. இந்த சர்வேயில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார்கள். 

'யோகா தினத்தில் யோகாசனம் செய்தீர்களா?' என்ற முதல் கேள்விக்கு  'இல்லை' என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தனர். யோகா செய்பவர்களில் தினமும் செய்பவர்களை விட எப்போதாவது யோகா செய்பவர்களே அதிகமாக உள்ளனர். அதேபோல,யோகா செய்பவர்கள் இதை உடல் ஆரோக்கியம் கிடைப்பதற்காக நம்பி செய்கிறோம் என்று தெரிவித்திருந்தாலும், யோகாவுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு 'ஆம்' என்றே அதிகமானோர் பதில் அளித்துள்ளனர். இதன் மூலம், யோகாவை ஒரு சாதாரண உடற்பயிற்சி என்று மட்டும் எண்ணாமல், நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் பார்க்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.  

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களின் கருத்துகளை சதவிகிதத்தின் அடிப்படையில் நீங்களும் அறிந்துகொள்ள கேள்விவாரியாக, கீழே காணலாம்.

 

யோகாசனம்- சர்வே முடிவு

 

யோகாசனம்- சர்வே முடிவு

யோகாசனம்- சர்வே முடிவு

 

யோகாசனம்- சர்வே முடிவு

யோகாசனம்- சர்வே முடிவு

 

யோகாசனம்- சர்வே முடிவு

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!