Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கஞ்சாவை மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாமா? - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? #DataStory

இந்த சமூகத்தைப் பாழ்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை போதை வஸ்துகள். தங்கள் இன்னல்களில் இருந்து தற்காலிகமாக விடுபடவும்  உடல் வலி மறக்கவும் மனிதர்களுக்கு போதை தேவைப்படுகிறது. ஆனால், அவை மெல்ல மெல்ல மனிதர்களை தின்று அழித்து விடுகின்றன.

போதைப்பழக்கம்

மது ஒரு பொதுவான போதைப்பொருள். மதுவுக்கு அடுத்தபடியாக நிறைய பேரை பீடித்திருக்கும் போதை என்றால் அது கஞ்சா தான். என்னதான் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்தாலும் அனைத்தையும் கடந்து கஞ்சா பொதுவெளிகளில் புகைந்து கொண்டு தான் இருக்கிறது. 

இந்தச் சூழலில், 'கஞ்சாவை மருத்துவப் பயன்பாடுகளுக்கு  பயன்படுத்த சட்டப்பூர்வமாகப் அனுமதிக்கலாம்' என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளோடு அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசும் முடிவெடுத்திருக்கிறது. 

கஞ்சா என்பது கடும் போதைப்பொருள். ஏற்கெனவே, பல்வேறு தடைகளையும் கடந்து  இண்டு இடுக்குகளில் நுழைந்து பொதுவெளிக்கு வந்து கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதற்கு அடிமையாக மாறியிருக்கிறார்கள். கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் என அவ்வப்போது காவல்துறை பலரைக் கைது செய்து கொண்டும் இருக்கிறது. இப்படியான சூழலில் மருத்துவப் பயன்பாடு என்ற பெயரில் கஞ்சாவை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்புக் குரலும் எழுந்திருக்கிறது. 

கஞ்சா

இந்தியாவில் கஞ்சாவைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றாலும், வட இந்தியாவில், சட்டவிரோதமாக இதைப் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிகரெட், புகையிலை வடிவில் மட்டுமல்லாமல் ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்ற உணவுப்பொருள்களிலும்  கஞ்சா கலக்கப்பட்டு மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பல இடங்களில் கஞ்சா பயிரிடப்படுவதும், பயன்படுத்துவதும் தொடர்கிறது.  

தற்போது கஞ்சாவை மருத்துவப் பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வமாக உபயோகிக்கலாம் என்று அனுமதி அளித்தால், மேலும் அது பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது. 

தமிழகத்தில்,  'மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்குக் கேடு' என்று விளம்பரம் செய்து கொண்டே,  அரசே மது விற்பனை செய்து வருகிறது.டாக்டர் அருணாச்சலம் பல்வேறு விதிமுறைகள் இருந்தாலும் சிறுவர்கள், பெண்கள், மாணவர்கள் மதுகுடித்து மயங்கிக்கிடக்கும் காட்சிகள் அவ்வப்போது செய்தி ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. அரசே மது விற்பதால், ,'குடிப்பது தப்பில்லை' என்ற மனோபாவம் பலருக்கு உருவாகியிருக்கிறது. 

இப்படியான சூழலில், கஞ்சாவை அனுமதிப்பது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். 

"கஞ்சா,  கன்னபியஸ் (Cannabias) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம்.  மூன்று முதல் ஏழு அடி வரை வளரக்கூடியது   இதில் உள்ள டி.ஹெச்.எல் (Tetrahydrocannabinol) என்னும் வேதிப்பொருள்களே  போதைக்குக் காரணமாகின்றது.

கஞ்சாவைப் புற்றுநோய், எய்ட்ஸ்,  நாள்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்துவது உண்மைதான். வலியைப் போக்குவதற்காக,  மற்ற வலி நிவாரணிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் ஆல்கஹாலிலும்கூட வலியைக் குறைக்கும் பொருள்கள் காணப்படுகின்றன. அதற்காக, 'வலியைக் குறைக்க மதுவைக் குடியுங்கள்' என்று எப்படி சொல்லமுடியும்?

கஞ்சா மருந்தாகுமா ?

கஞ்சாவை அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். அதைக்காட்டித் தான் இங்கும் அனுமதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன. ஆனால் நம் வாழ்க்கை முறை என்பது அமெரிக்காவோடு துளியளவும் பொருந்திப்போகாது. அமெரிக்கர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கும், இந்தியர்கள் பயன்படுத்துவதற்கும் வேறுபாடுகள் உண்டு. எதை, எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது நம் மக்களுக்குத் தெரியாது. இவர்களின் கைகளில் கஞ்சா போன்ற மோசமான போதை வஸ்துகள் எளிதாகக் கிடைக்குமேயானால் அது பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும்..." என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம். 

" கஞ்சா போன்ற போதை வஸ்துகளின் பிரதான பணி என்னவென்றால், உடலுக்குள் சென்று மூளையின் செயல்பாட்டையும் போதைக்கு அடிமைமனநிலையையும் மாற்றுவது, அல்லது அவற்றை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் செய்வதே. எல்லா போதைப்பொருள்களும் இதைத்தான் செய்கின்றன. மற்றபடி அவற்றில் சத்துகளோ, உடல் வலிமையை அதிகரிக்கும் பொருள்களோ நிச்சயம் கிடையாது.  போதையில் திளைப்பதால் ரேஷ்மாமனக்கவலையோ, ஏமாற்றமோ எந்தவகையில் குறையவும் போவதில்லை. எனவே போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது எந்தவொரு பிரச்னைகளுக்கும் தீர்வாகாது என்பதை முதலில் உணர வேண்டும். 

கஞ்சாவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவற்றை வெளிப்படையாக விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ முடியவில்லை. அவ்வப்போது ஆங்காங்கே ரெய்டு நடத்தி விற்பனை செய்பவர்களைப் பிடிக்கிறார்கள். ஒரு பயம் இருக்கிறது. சட்டப்பூர்வமாக அனுமதிக்கும்பட்சத்தில்  பொதுவெளியில் சாதாரணமாக புழங்கத் தொடங்கிவிடும். காவல்துறையினர் பிடித்தாலும், 'மருத்துவப் பயன்பாட்டுக்காக வைத்திருக்கிறோம்' என்று சொல்லி தப்பி விடுவார்கள். குறிப்பாக கஞ்சாவை ஒருமுறை பயன்படுத்தினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும். அதனால் கஞ்சாவை மருந்துக்குக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதே என் வேண்டுகோள்.." என்கிறார்  மனநல மருத்துவர் ரேஷ்மா..

வெளிநாட்டினர் போதை வஸ்துகளை கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோர்,  போதைப் பொருட்களை அன்றாடம் ஒரு உணவைப் போல பயன்படுத்துகிறார்கள். போதை வஸ்துகளைப் பயன்படுத்தும் 60 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் போதை நோயாளிகளாகவே மாறிவிடுகிறார்கள் என்று அரசு புள்ளி விபரங்களே சொல்கின்றன. அதனால், எக்காரணம் கொண்டும் கஞ்சாவை மருத்துவப் பொருளாக அனுமதிக்கக்கூடாது என்பதே மருத்துவர்களின் கருத்தாக மட்டுமின்றி மக்கள் கருத்தாகவும் இருக்கிறது!

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement