Published:Updated:

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

ஜெ.நிவேதா

வளர்ந்த பிறகு, ஒருவரது குணாதிசயங்கள் யாவும், அவர்களின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைப் பொறுத்துதான் அமையும் என்பது உளவியல் கூறும் உண்மை என்பதால் எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்.

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay
பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

பள்ளிகளில் பாலியல் கல்வியைப் போதிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக ஒரு விவாதம் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மழலை மாறாத வயதில் குழந்தைக்கு இந்தக் கல்வி ஏன் அவசியம், பிஞ்சுகளின் மனதில் விரசம் ஏற்படாதபடி அதைச் சொல்லிக்கொடுப்பது எப்படி, பாடத்திட்டத்தை எப்படி அமைக்கலாம், குழந்தைக்கு பாலியல் தொடர்பான சந்தேகங்களைச் சொல்லிக்கொடுப்பதால் என்ன நன்மைகள் விளைந்துவிடப்போகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கொண்டுவருவதற்கு முன் குடும்பங்களில் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

யாரோ ஒரு வெளிநபர் மூலமாகவோ சமூக வலைதளங்கள் வழியாகவோ குழந்தைகள் பாலியல் தொடர்பான விஷயங்களைப் புரிந்துகொள்வதைவிட பெற்றோரே அதை அவர்களுக்குப் புரிய வைப்பது நல்லது. பொதுவெளியில் அதிகரித்திருக்கிற வக்கிரமும் பாலியல் வறட்சியும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் பெரும் சவாலை உருவாக்கியிருக்கின்றன. இந்த வலையிலிருந்து குழந்தைகளைக் காத்து நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித் தருவதில் பெற்றோருக்குப் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அப்பாவின் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. தந்தையர் தினமான இன்று குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் அப்பாவுக்கு உள்ள பங்கு குறித்து விரிவாகப் பார்ப்போம். 

"குழந்தைகளுக்கு வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய அறிவுரைகள் வழங்குவதைவிட பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். பாலியல் என்றவுடன், உடலுறவு தொடர்பான விஷயங்களை சொல்லிக்கொடுப்பது என்று பலர் நினைக்கின்றனர்; இது தவறான புரிதல். உடல் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, ஹார்மோன் மாற்றங்கள், உடல் உறுப்புகள் வளர்ச்சி என ஒவ்வொரு விஷயத்தையும் அந்தந்த வயதில் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளிடம் அம்மாக்கள் மாதவிடாய் பற்றி பேசுவதுபோல ஆண் குழந்தைகளிடம் அப்பாக்கள் பேசுவதில்லை என்பது கசப்பான ஓர் உண்மை..." என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. 

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

"குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சரியான தகவலைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், ஐந்து முதல் ஏழு

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

வயது வரையிலான குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பற்றி சொல்லித்தர வேண்டும். கண், காது தொடங்கி உள்ளுறுப்புகளின் வளர்ச்சி வரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகளுக்கு, உள்ளுறுப்பு வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் இந்த வயதில்தான் ஏற்படும். ஆண்-பெண் என இரு குழந்தைகளும் உள்ள வீடுகளில், 'ஏன் நமக்கு மட்டும் இந்த உறுப்பு இப்படி இருக்கு? அக்கா/அண்ணனுக்கு இந்தப் பகுதி வேறு மாதிரி இருக்குதே. அவங்க வேறமாதிரி பாத்ரூம் போறாங்களே' என்ற சந்தேகம் வரும். பெண் குழந்தைக்குத் தனது மார்பக வளர்ச்சி குறித்தும், ஆண் குழந்தைக்கு பிறப்புறுப்பு எழுச்சி குறித்த சந்தேகமும் இருக்கும். அதுபற்றி நண்பர்களிடம் அவர்கள் தயங்கித்தயங்கி விசாரிப்பார்கள். இதுபோன்ற சூழலில்தான், 

பெற்றோர் உடலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாடத்திட்டங்களில் தரப்பட்டிருக்கும் படங்களைக் காண்பித்து, 'ஆண் என்றால் இந்தந்த உறுப்புகள் இருக்கும், பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு இந்தந்த உறுப்புகள் இருக்கும். பெண்கள்தான் பிற்காலத்தில் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். குழந்தை பிறந்ததும் தாய் தாய்ப்பால் கொடுப்பார்கள். அதைக் குழந்தைகளுக்குப் புகட்டுவார்கள். அதற்காகத்தான் இயற்கையாகவே பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சியடைகின்றன' என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். உடலியல் பற்றிய இந்தத் தகவல்களை ஆண் குழந்தைகளுக்கு அப்பாக்களும் பெண் குழந்தைகளுக்கு அம்மாக்களும் சொல்லிக்கொடுப்பது சிறப்பு. 

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

சில குழந்தைகள் இயல்பாக வித்தியாசமான சில செயல்களைச் செய்வார்கள். பிறப்புறுப்பில் அடிக்கடி கைகளை வைப்பது, ஹேண்ட் ஷவரைக் கொண்டு நீரைப் பீய்ச்சி அடிப்பது போன்ற செயல்களைச் செய்வார்கள். இந்த  செயல்களை என்னவென்று தெரியாமல் செய்வார்கள். பெண் குழந்தைகளுக்கு அம்மாவோ, பாட்டியோ, அத்தையோ, சித்தியோ பக்குவமாக சில விஷயங்களைச் சொல்லித் தருவார்கள். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு அப்படி யாரும் சொல்லித் தருவதில்லை. அதிக நேரம் தனிமையில் இருப்பது, அம்மாவோ அப்பாவோ பேசச் சென்றால் அவர்களைத் தவிர்ப்பது, அறையைப் பூட்டிக்கொள்வது என ஆண் குழந்தைகள் வித்தியாசமாகச் செயல்படத் தொடங்குவார்கள். சோர்வாகவும் இருப்பார்கள். 

இரவு தலையையும் சேர்த்து போர்வையால் போர்த்திக்கொண்டு விழித்திருப்பார்கள் (போர்வையினுள் தூங்காமல் இருப்பதை அசைவுகள் மூலம் உணரலாம்). கழிவறையில் அதிக நேரம் செலவிடுவார்கள். இப்படியெல்லாம் ஆண் குழந்தைகள் செயல்பட்டால் பெற்றோர் விழித்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக அப்பாக்கள். உடனடியாக அவர்களைக் கண்காணிக்க வேண்டும். 'தான் கண்காணிக்கப்படுகிறோம்' என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம். ஒருவேளை அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்கள் பதற்றமடையத் தொடங்கி அதை மறைப்பதற்காகப் போராடுவார்கள். ஒருகட்டத்தில், 'தான் தவறான குழந்தை' என்றும், 'தனக்கு ஏதோவொரு  பிரச்னை' என்றும் நினைத்துக்கொள்வார்கள். எனவே, அவர்களிடம் இதுகுறித்து யதார்த்தமாகப் பேசுங்கள். 

குழந்தைகளைத் தனிமையில் இருக்கவிடாதீர்கள். 'என்ன செய்கிறாய், ஏதாச்சும் பிரச்னையா?' என்று கேளுங்கள். 'ஏன் கொஞ்ச நாளாவே தனியா இருக்க நினைக்கிற, எங்கிட்ட ஏதாச்சும் சொல்லணும்னா சொல்லுப்பா... அம்மா இல்லைனா அப்பாகிட்ட ஏதாச்சும் பிரச்னை இருந்தா சொல்லு... உன்னோட நல்லதுக்காகத்தான் நாங்க இருக்கோம். எதுவா இருந்தாலும் சொல்லு, பார்த்துக்கலாம்' என்று சொல்லுங்கள். ஒருவேளை உங்கள் பிள்ளை தான் சுயஇன்பம் காண்பதாகச் சொன்னால், உடனடியாகக் கோபப்படாதீர்கள். நீங்கள் பதற்றப்பட்டு, குழந்தைகளைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கிவிட வேண்டாம். இதுபோன்ற சிக்கலில் உள்ள குழந்தையைக் கீழ்க்காணும் விதத்தில் அணுகுங்கள். 

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

'நீ பெரியவனாக மாறுவதால் உன்னோட உடலின் உறுப்புகள் எல்லாம் வளர்ச்சியடைத் தொடங்குகின்றன. ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து, உன்னை இப்படிச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கின்றன. உன் வயதில் எல்லோருக்கும் இதுபோன்ற எண்ணங்கள் எழும். இது இயல்புதான்; நீ பயப்படாதே. ஆனால், தொடர்ச்சியாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அந்த இடத்தில் புண் வரலாம். அந்தச் செயலின் மூலம் சில நிமிடங்கள் மகிழ்ச்சியாக இருக்குமே தவிர, அடுத்த சில மணி நேரத்தில் சோர்வு வந்து பலவீனமாகிவிடுவாய். அது உன் உடல்நலத்தையும் படிப்பையும் பாதிக்கும். அதனால் நீதான் கஷ்டப்படுவாய்... ஆகவே இனிமேல் அதைச் செய்யாதே' என்று சொல்லுங்கள். 

'ஒரு நாளில் நீ எத்தனை முறை இதைச் செய்கிறாய்' எனக் குழந்தையிடம் கேளுங்கள். 'உடனடியாக இதைக் கட்டுப்படுத்த வேண்டும். உன்னால் முடியும். வெவ்வேறு வேலைகளில் உன் கவனத்தைச் செலுத்து. அதற்கு நான் உனக்கு உதவி புரிகிறேன்' என்று சொல்லுங்கள். அடுத்தடுத்த தினங்களில் குழந்தையுடன் இருந்து அவர்களது எண்ணங்களைத் திசைதிருப்புங்கள். 'எந்தச் சூழலிலும், பொது இடத்தில் இதைச் செய்யாதே' என்பதை மட்டும் ஆழமாகச் சொல்லுங்கள். ஆண் குழந்தையின் வித்தியாசமான செய்கைகள் பெற்றோருக்குத் தெரிந்த பிறகு குழந்தையால் இயல்பாக மற்ற வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றால், தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள். 

10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பையின் செயல்பாடுகள், விந்து வெளியேற்றம் பற்றி சொல்லிக்கொடுங்கள். 'பிறப்புறுப்பை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?', 'ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?' என்பது குறித்தும் அப்பாக்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவயதில், ஆண் குழந்தையைக் குளிப்பாட்டும் வேலையை அப்பாக்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னாளில் குழந்தை அப்பாக்களுடன் பேசுவதை சௌகரியமாக உணரும். 

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

விந்து வெளியேற்றம் எப்போதெல்லாம் ஏற்படலாம் எனக் குழந்தையிடம் தந்தை கட்டாயம் பேச வேண்டும். 'சில நேரங்களில் அது சிறுநீருடன் வெளியேறிவிடும். சில நேரங்களில் தூக்கத்தில் உன்னையும் அறியாமல் வெளியேறும். அந்த இடத்தில் நீ அதிகமாக அழுத்தம் கொடுத்தால் வழக்கத்துக்கு மாறாக அது வெளியேறும். அது உன்னுடைய உள்ளாடையில் தெரியும். அதனால் உனக்கு அசௌகரியம் ஏற்படலாம்' என்று எடுத்துச் சொல்லுங்கள். அம்மாக்கள் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம். காரணம், என்னதான் பாசம் புரிதல் இருந்தாலும், எதிர் பாலினம் என்பதால் குழந்தைக்குச் சங்கடம் ஏற்படலாம். சிங்கிள் மதராக இருந்தால், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர் மூலம் குழந்தைக்கு விஷயத்தைப் புரியவைக்கலாம். 

14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, 'உடலுறவு என்றால் என்ன?' என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். முழுக்க முழுக்க அறிவியல் ரீதியாக இதை விளக்க வேண்டும். 'பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு என்பது என்ன?', 'வளரிளம் பருவத்தில் உறவு கொள்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?', 'வளரிளம் கால கர்ப்பம் ஏன் ஆபத்தானது?' என்பதை இரு பாலின குழந்தைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆண் குழந்தை என்பதால், அப்பா பேசிமுடித்ததும் அம்மாவை அழைத்து பெண்ணின் உடலியல் குறித்துப் பேசவைக்கலாம். இது, எதிர் பாலின ஈர்ப்பிலிருந்து அவர்களைத் தெளியவைக்கும்.

பருவ வயதில் தடுமாறும் ஆண் குழந்தைகள்... அப்பாக்கள் செய்ய வேண்டியது என்ன? #FathersDay

மேற்கூறியவை யாவும், ஆண் குழந்தைக்கு அப்பா செய்ய வேண்டிய விஷயங்கள். பெண் குழந்தைகளுக்கு இவை அனைத்தையும் அம்மாக்கள் செய்ய வேண்டும். அம்மாவோ, அப்பாவோ... 'எதிர் பாலினத்தவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, வெறும் ஹார்மோன் மாற்றங்கள்தான். பயம் கொள்ளாதே. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல். வாழ்வின் எல்லா நிலையிலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன்; எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று குழந்தையிடம் தொடர்ச்சியாகச் சொல்லி வளருங்கள். 

வளர்ந்த பிறகு, ஒருவரது குணாதிசயங்கள் யாவும், அவர்களது குழந்தைப்பருவ நிகழ்வுகளைப் பொறுத்துதான் அமையும் என்பது உளவியல் கூறும் உண்மை என்பதால், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்'' என்கிறார் மருத்துவர் ஜெயந்தினி.

Vikatan