Published:Updated:

போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்கும் நாய்கள்... முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'பெட் தெரபி'

ஜெனி ஃப்ரீடா

விபத்துக்குப் பின்பான மனஅழுத்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பெட் தெரபி' என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்கும் நாய்கள்... முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'பெட் தெரபி'
போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்கும் நாய்கள்... முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'பெட் தெரபி'

மெரிக்க ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் பங்கேற்று உடல்நலனை இழந்து தவிக்கும் முன்னாள் வீரர்களின் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்காக செல்லப்பிராணியான நாய்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. ஆம், விபத்துக்குப் பின்பான மனஅழுத்த குறைபாட்டால் (Post-traumatic Stress Disorder) பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'பெட் தெரபி' (Pet therapy) என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்கும் நாய்கள்... முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'பெட் தெரபி'

ஒரு தனியார் தொண்டு நிறுவனம், இதற்காகப் பல வகையான நாய்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்றை  பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது. பயிற்சி  அளிக்கப்பட்ட நாய்கள், உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்றன. பயிற்சியளிக்கப்பட்ட இந்த நாய்கள், தங்கள் எஜமானர்களுக்கு நன்றியோடு இருப்பது மட்டுமன்றி, அவர்களின் உற்ற நண்பனாகவும் இருக்கின்றன.

போரினால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்கும் நாய்கள்... முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 'பெட் தெரபி'

"என்னுடைய ராக்கிக்கு மூன்று வயதாகிறது. அவனால் கதவைத் திறந்து என் அறைக்குள் நுழைய முடியும். அறையின் விளக்குகளைப் போட்டு, நான் போர்த்தியிருக்கும் போர்வையை விலக்கி, என் கையை நக்கி என்னை எழுப்பிவிடும்" என்கிறார், கொரியப் போரில் பங்கேற்று மன அழுத்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் 84 வயது மைக்கேல் கிட், ராக்கி வந்ததற்குப் பிறகு அவர் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் அளவும் குறைந்திருக்கிறதாம்.

Vikatan